கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில், நேற்று நள்ளிரவு கெப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12.45 மணியளவில், சட்டவிரோதமாக புளியம்பொக்கணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி சென்ற வாகனம் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தேராவில் பகுதியில் மகேந்திரா கப் வாகனத்தை பொலிசார் நிறுத்திய போது, வாகனம் சமிக்கையை மீறி நிறுத்தாது சென்ற நிலையில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன்போது சாரதி வாகனத்தை விட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
ஐந்து தடவைகள் வாகனத்தின் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் நள்ளிரவில் பதற்றம்; கெப் ரக வாகனம் மீது ஐந்து முறை துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில், நேற்று நள்ளிரவு கெப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.45 மணியளவில், சட்டவிரோதமாக புளியம்பொக்கணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி சென்ற வாகனம் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தேராவில் பகுதியில் மகேந்திரா கப் வாகனத்தை பொலிசார் நிறுத்திய போது, வாகனம் சமிக்கையை மீறி நிறுத்தாது சென்ற நிலையில் பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.குறித்த சம்பவத்தின் போது எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன்போது சாரதி வாகனத்தை விட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தின் சக்கரத்தில் சிதைவு ஏற்பட்டுள்ளது. ஐந்து தடவைகள் வாகனத்தின் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.