• Sep 20 2024

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை மழையை பொழிந்த ரஷ்யா!

Tamil nila / Jan 15th 2023, 7:00 pm
image

Advertisement

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா துருப்புகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.


நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது.


இவ்வாறான நிலையில் நேற்று (14-01-2023) அதிகாலை கீவ் நகர் மீது ரஷ்ய துருப்புக்கள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கின.


ரஷ்யாவின் ஏவுகணை மழையில் கீவ் நகரம் அதிர்ந்தது. இதில் 18 வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஏவுகணை தாக்குதலில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன.


இருப்பினும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.


முன்னதாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள சோலிடர் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று முன்தினம் (13-01-2023) அறிவித்தது.


ஆனால் அதை மறுத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சோலிடர் நகரில் சண்டை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.


உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை மழையை பொழிந்த ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா துருப்புகள் ஏவுகணை மழை பொழிந்ததில் கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது.இவ்வாறான நிலையில் நேற்று (14-01-2023) அதிகாலை கீவ் நகர் மீது ரஷ்ய துருப்புக்கள் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்கின.ரஷ்யாவின் ஏவுகணை மழையில் கீவ் நகரம் அதிர்ந்தது. இதில் 18 வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஏவுகணை தாக்குதலில் பல கட்டிடங்கள் தீப்பற்றி எரிந்தன.இருப்பினும், இந்த தாக்குதலில் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.முன்னதாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டொனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள சோலிடர் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று முன்தினம் (13-01-2023) அறிவித்தது.ஆனால் அதை மறுத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, சோலிடர் நகரில் சண்டை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement