ஹிக்கடுவ கடற்கரையில் நீராடிய வேளை நீரில் மூழ்கிய மூன்று ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவா கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, ஹிக்கடுவா காவல்துறை உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
ஹிக்கடுவ கடற்கரைக்குச் செல்பவர்கள், குறிப்பாக உள்ளூர் கடல் நிலைமைகளைப் பற்றி அறிமுகமில்லாத சுற்றுலாப் பயணிகள், கடலோரப் பகுதிகளில் நீந்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு வந்த ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிகள்; ஹிக்கடுவா கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி. ஹிக்கடுவ கடற்கரையில் நீராடிய வேளை நீரில் மூழ்கிய மூன்று ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த சுற்றுலாப் பயணிகள் ஹிக்கடுவா கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.இதனையடுத்து அவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, ஹிக்கடுவா காவல்துறை உயிர்காக்கும் பிரிவின் அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு அவர்களைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.ஹிக்கடுவ கடற்கரைக்குச் செல்பவர்கள், குறிப்பாக உள்ளூர் கடல் நிலைமைகளைப் பற்றி அறிமுகமில்லாத சுற்றுலாப் பயணிகள், கடலோரப் பகுதிகளில் நீந்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.