• May 01 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்ப்பு; பரப்பப்படும் தகவல் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

Chithra / May 1st 2025, 1:18 pm
image

 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான சரித் தில்ஷான் என்ற மாணவன் உயிரை மாய்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த காரணத்தை பொலிஸ் விசாரணைகளால் உறுதியாக வெளிப்படுத்த முடியவில்லை. 

எனவே பகிடிவதையால் ஏற்பட்ட மரணம் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவன் உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார் எனவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் மன விரக்தி  காரணமாக, மாணவன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்ப்பு; பரப்பப்படும் தகவல் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்  சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான சரித் தில்ஷான் என்ற மாணவன் உயிரை மாய்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.எனினும் இந்த காரணத்தை பொலிஸ் விசாரணைகளால் உறுதியாக வெளிப்படுத்த முடியவில்லை. எனவே பகிடிவதையால் ஏற்பட்ட மரணம் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த மாணவன் உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதியுள்ளார் எனவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள், குறித்த மாணவனின் ஆடைகளை களைந்து பகிடிவதை மேற்கொண்டமையினால் மன விரக்தி  காரணமாக, மாணவன் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement