• May 06 2024

எனது பதவியை பறிக்க சதி செய்யும் சஜித் - டயானா கமகே பகிரங்க குற்றச்சாட்டு..!samugammedia

mathuri / Feb 1st 2024, 6:15 am
image

Advertisement

ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவே கண்ணீர்ப்புகைத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

" கட்டுக்கடங்காத ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுமென்றே நாட்டை முடக்கி, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றார்" எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை மக்களைத் தூண்டிவிட்டு, இதுபோன்ற பொறுப்பற்ற வேலையைச் செய்வதால், இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைபடும். கண்ணீர் புகை தாக்குதல் பற்றி அதிகம் பேசும் சஜித் பிரேமதாச, தனது தந்தையின் பாதையை சிந்தித்து செயற்பட வேண்டும்.

அத்தோடு கண்ணீர் புகை தாக்குதலால் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாபர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை சிரிப்பை ஏற்படுத்துகின்றது.

சஜித் பிரேமதாசவும் முஜிபுர் ரஹ்மானும் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர் எனவும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

எனது பதவியை பறிக்க சதி செய்யும் சஜித் - டயானா கமகே பகிரங்க குற்றச்சாட்டு.samugammedia ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவே கண்ணீர்ப்புகைத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்." கட்டுக்கடங்காத ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுமென்றே நாட்டை முடக்கி, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றார்" எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இதேவேளை மக்களைத் தூண்டிவிட்டு, இதுபோன்ற பொறுப்பற்ற வேலையைச் செய்வதால், இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தடைபடும். கண்ணீர் புகை தாக்குதல் பற்றி அதிகம் பேசும் சஜித் பிரேமதாச, தனது தந்தையின் பாதையை சிந்தித்து செயற்பட வேண்டும்.அத்தோடு கண்ணீர் புகை தாக்குதலால் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாபர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை சிரிப்பை ஏற்படுத்துகின்றது.சஜித் பிரேமதாசவும் முஜிபுர் ரஹ்மானும் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர் எனவும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement