• May 03 2024

mathuri / Feb 1st 2024, 6:23 am
image

Advertisement

கிழக்கு  மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலநறுவை  மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்  பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய,  மற்றும சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின் சில இடங்களிலும்  75  மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருகோணமலை  தொடக்கம்  மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஹம்பாந்தோட்டை தொடக்கம் மாத்தறை  ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இதேவேளை, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 மில்லிமீற்றர் வேகத்தில் வடகிழக்கு அல்லது கிழக்குத்  திசையில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.samugammedia கிழக்கு  மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலநறுவை  மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்  பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மத்திய,  மற்றும சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின் சில இடங்களிலும்  75  மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திருகோணமலை  தொடக்கம்  மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஹம்பாந்தோட்டை தொடக்கம் மாத்தறை  ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 மில்லிமீற்றர் வேகத்தில் வடகிழக்கு அல்லது கிழக்குத்  திசையில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement