• Sep 21 2024

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியீட்டும்..! தயாசிறி நம்பிக்கை

Chithra / Aug 8th 2024, 11:28 am
image

Advertisement

 

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றியீட்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  நேற்று  முற்பகல்  கைச்சாத்திடப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் சென்ற ஒருவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக இருந்த அவர் பிற்காலத்தில் ஜனாதிபதியானார். ஒன்பதரை வருடங்கள் அவர் கட்சியின் தலைவராக இருந்தவர்.

இந்த ஒன்பது வருடத்தில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பல வழிகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு சிலர் பலவந்தமாக கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

ஆனால் கட்சியின் செயலாளர் நானே. எனவே  எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று நாம் சஜித் பிரேமதாச தலைமையில் தேர்தலில் அமோக வெற்றியீட்டுவோம்.

அதன்பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும். சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியினருக்கு இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய வல்லமை உள்ளது. மக்கள் ஆணையுடன் இந்த நாட்டை வழிநடத்த தயாராக உள்ளோம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியீட்டும். தயாசிறி நம்பிக்கை  எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி, அமோக வெற்றியீட்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  நேற்று  முற்பகல்  கைச்சாத்திடப்பட்டது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் சென்ற ஒருவர்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக இருந்த அவர் பிற்காலத்தில் ஜனாதிபதியானார். ஒன்பதரை வருடங்கள் அவர் கட்சியின் தலைவராக இருந்தவர்.இந்த ஒன்பது வருடத்தில் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பல வழிகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு சிலர் பலவந்தமாக கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.ஆனால் கட்சியின் செயலாளர் நானே. எனவே  எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதியன்று நாம் சஜித் பிரேமதாச தலைமையில் தேர்தலில் அமோக வெற்றியீட்டுவோம்.அதன்பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் கட்டியெழுப்பப்படும். சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியினருக்கு இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய வல்லமை உள்ளது. மக்கள் ஆணையுடன் இந்த நாட்டை வழிநடத்த தயாராக உள்ளோம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement