• May 12 2024

வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளை குறிவைக்கும் சஜித் தரப்பினர்...!

Sharmi / Feb 29th 2024, 11:28 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைத்துக் களமிறங்குவது தொடர்பில் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவே இதனை தெரிவித்தார்.

நேற்றையதினம் (28) ஊடக சந்திப்பு ஒன்றில்  பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றி தமிழ்க் கட்சிகள் (வடக்கு) அவதானம் செலுத்தி வருகின்றன. இந்தக்கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் எம்முடன் இணக்கத்துக்கு வந்துள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது. கூட்டணி அமைத்தே நாம் களம் இறங்குவோம்.

அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைத்துக்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளை குறிவைக்கும் சஜித் தரப்பினர். ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைத்துக் களமிறங்குவது தொடர்பில் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவே இதனை தெரிவித்தார்.நேற்றையதினம் (28) ஊடக சந்திப்பு ஒன்றில்  பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது பற்றி தமிழ்க் கட்சிகள் (வடக்கு) அவதானம் செலுத்தி வருகின்றன. இந்தக்கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மலையகத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் எம்முடன் இணக்கத்துக்கு வந்துள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது. கூட்டணி அமைத்தே நாம் களம் இறங்குவோம். அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைத்துக்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement