• Nov 24 2024

13 ஐ அமுல்படுத்த தயாராக உள்ள சஜித் - ஆனால் அதனை மனோகணேசனூடாக வெளிப்படுத்தியது தவறு - கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு

Tharun / May 3rd 2024, 5:34 pm
image

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றார் ஆனால் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில்  மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 


சபாரத்தினம் அவர்கள் ஒற்றுமையை விரும்பியவர் என்பதற்காக தமிழீழ இயக்க இந்த வாரத்தை தமிழ் தேசிய ஒற்றுமை வாரம் என்பதாக பிரகடனப்படுத்தி இந்த வாரத்தை நாங்கள் அவரது நினைவாக அனுஷ்டித்து கொண்டு வருகின்றோம்.

உண்மையில் இன்று தமிழ் ஈழத்திற்காக போராடிய நாங்கள் எங்கு நிற்கின்றோம் என்றால் திசை தெரியாமல் நடு சந்தியிலே தமிழ் கட்சிகள் மாத்திரம் அல்ல தமிழ் மக்களும் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

87 ஜூலை கால கட்டங்களில் அந்தப் போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது.இந்தியா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கடல் வழியாக அனுப்பியது அந்தக் கப்பல் இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பபட்டதுடன் ஆகாய மார்க்கமாக உணவு பொட்டலங்கள் போடப்பட்டது. அது ஜே.ஆர் ஜெயவர்த்தனவிற்கு கொடுக்கப்பட்ட ஒரு மிரட்டல் அந்த மிரட்டலுடன் தான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.


1983 ஆம் ஆண்டு ஜூலை ஏற்பட்ட கலவரத்திற்கும் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தத்திற்கும் இடைப்பட்ட காலம் நான்கு வருடங்கள் இந்த காலத்தில் வட கிழக்கிலே போரினால் கொல்லப்பட்ட தமிழர்கள் என்றால் ஒரு சிலர் நூற்றுக்கணக்கானவர்கள் மாத்திரம் தான் அது மாத்திரமல்லாமல் ஒரு தலைவர் கொல்லப்பட்டார் என்றால் சபாரத்தினம் மாத்திரம் தான்.

நாங்கள் எங்களது போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களில் தவற விட்டு இருக்கின்றோம். அதில் ஒரு சந்தர்ப்பம் தான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை நாங்கள் அன்று எங்களுடைய இன பிரச்சனைக்குரிய தீர்வு காண ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று வட கிழக்கு இருக்கின்ற நிலைமை வேறாக இருந்திருக்கும்.



ஆனால் நாங்கள் அதனை தவற விட்டது என்று நாங்கள் இருக்கும் நிலையை தற்போது எங்களது பிரதேசங்களை எங்களது மாவட்டங்களை எங்களது நிலங்களை எங்களது எல்லை புறங்களை காப்பாற்ற முடியாத நிலையில் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை யாவது முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று.

ஆனால் இந்த வருடம் முடிவதற்கு முன்பு இந்த நாட்டின் புதியதொரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது.

தற்போது களத்தில் எங்களுக்கு தெரிய மூன்று வேட்பாளர்கள் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க இவர்கள் தமிழ் மக்களுக்கு அவர்களது புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கு என்ன வழி என்று சிந்திப்பதை விடுத்து தமிழ் மக்களது வாக்குகளை எவ்வாறு பெறலாம் என்றே சிந்தனையிலே இருக்கின்றார்கள்.

இந்த நாடு பொருளாதார ரீதியாக கடந்த மூன்று வருடங்களாக அதல பாதாளத்திற்கு சிக்கி தவிக்கின்றது இந்த பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர துடிப்பவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை தான் முக்கியமான காரணம் என்று.

30 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசு போர் செய்திருக்கின்றது ஜே.ஆர்.ஜெயவர்த்தன போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று அந்தப் போரை தொடங்கினார். அந்தப் போருக்காக இலங்கை அரசாங்கம் எத்தனை மில்லியன் டொலர்களை ஆயுதங்களுக்காக ஆமிக்காரருகாக கிபீர் விமானங்களுக்காக குண்டுகளுக்காக ஏவுகணைக்காக பல்குழல் துப்பாக்கிகளுக்காக எத்தனை பில்லியன் டொலர்களை செலவழித்து இருப்பார்கள் அதனால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் பாதிப்பு என்ன என்பதனை புரிந்து கொள்ளாமல் தற்போதும் வடகிழக்கு மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். 

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வரும் போது கூறினார் இங்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை பொருளாதார ரீதியாக அவர்கள் வலுப்பெற்றால் சரி என்று ஆனால் தற்போது ஒரு ஜனாதிபதி வேட்பாளராக ஒரு ஜனாதிபதி கனவோடு இருக்கும் அனுரகுமார திசாநாயக்க கிளிநொச்சியில் கூறுகின்றார் தான் அரசுக்கு வந்தால் மூன்று வேளை சாப்பாடு கொடுப்பேன் என்று அப்போது இந்த மக்கள் வடகிழக்கு மக்கள் சோத்துக்காக தான் போராடினார்கள் என்பது அவருடைய கணிப்பு.

அதேபோன்று சஜித் பிரேமதாச கூறியதாக மனோ கணேசன் கூறுகின்றார் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்று.


அதனை இவர் கூறக்கூடாது தமிழ் தேசியத்திற்காக தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் ஆக குறைந்தது அதன் மூன்றாவது திருத்தச் சட்டத்தையாவது அந்த திருத்தச் சட்டத்தில் உள்ளதை உள்ளபடி முழுவதுமாக நான் அமுல்படுத்துவேன் என்பதனை எங்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கும் எங்களுக்கு ஒரு கதை வட கிழக்கிற்கு ஒரு கதை தெற்கிற்கு ஒரு கதை கூறாமல் பகிரங்கமாக அறிவித்து அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை கொண்டு வர வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேசும் போது போலீஸ் அதிகாரம் தவிர்த்து ஏனையவற்றை அமல்படுத்துவதாக கூறுகின்றார் போலீஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்தி என்ன பிரயோசனம் என்பதனை அனுபவ ரீதியாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் மத்திய அரசுக்கு கீழ் இருக்கும் காவல்துறையினர் போலீசார் நீதிமன்றங்களினால் பிறக்கப்படும் கட்டளைகளை கூட தமிழ் மக்களுக்கு சாதகமாக சார்பாக அவர்களது நியாயங்களை புரிந்து கொண்டு விடுவிக்கப்படும் கட்டளைகளை கூட இந்த போலீசார் அமுல் படுத்துகின்றார்கள் இல்லை. 

குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக விகாரை கட்டக் கூடாது என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது அதையும் பார்க்காமல் இந்த பாதுகாப்பு படைகளின் ஆதரவுடன் புத்த பிக்குகள் தொடர்ச்சியாக விகாரையை கட்டினார்கள். மயிலத்தமடு மாதவனை பகுதியிலே அத்துமீறி குடியேறி சேனை பயிர்ச்செய்கையில் எங்களுடைய பண்ணையாளர்களை விரட்டி அடிக்கின்றார்கள் அவர்களது மாடுகளை சுட்டும் வெட்டியும் கொல்கின்றார்கள்.

இன்று 240 நாட்களைக் கடந்து அந்த பண்ணையாளர்கள் வீதியிலே தங்களுக்கு நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றார்கள் ஏறாவூர் நீதிமன்றம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு கட்டளை பிறப்பிக்கின்றது அங்கு அத்துமீறிய குடியேற்றங்களை வெளியேற்றுமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தயாராக இருந்தாலும் அதற்கு பாதுகாப்பு படையினர் ஒத்துழைப்பு இல்லை.

இவ்வாறான நேரத்தில் ஒரு மாகாணத்திற்கு அதிகாரங்களை கொடுத்துவிட்டு பாதுகாப்பு படைகளை அந்த போலீசாரின் அதிகாரங்களை கொடுக்காமல் விட்டால் அந்த அதிகாரத்தை கொடுத்து அந்த மாகாணங்கள் தன்னுடைய நிர்வாகத்தை எவ்வாறு நடத்துவது என்பது கூட சிந்திக்காமல் இந்த ஜனாதிபதி ராயல் விக்ரமசிங்க இந்த கூற்றை கூறுகின்றார் என்றால் இவர்களுக்கு தமிழ் மக்கள் மீது என்ன அக்கறை இருக்கின்றது.

இதற்காகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே நாங்கள் எங்களது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் இத்தனை இழப்புக்களுக்கு பின்பும் நாங்கள் சுயமாக செயல்படுவதற்காக தயாராக இருக்கின்றோம் எங்களது உரிமைகளை மாறி மாறி இந்த நாட்டை ஆளும் அரசுகள் பறிக்கின்றார்கள் என்பதனை நாங்கள் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் உணர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.

எங்களினால் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வரப்போவதில்லை அது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆனாலும் எங்களால் வாக்களிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி எங்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை.

ஏனென்றால் இந்த நாட்டிலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களினால் ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்கள் இந்த வரலாற்றில் முதன் முதலாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால மற்றும் கோட்டபாய தற்போது இருப்பவர் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டவர்.

இந்த ஆறு ஜனாதிபதிகளில் இரண்டு ஜனாதிபதிகள் தெளிவாகுவதற்கு நாங்கள் வாக்களித்து இருக்கின்றோம் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இவர்களுக்கு நாங்கள் வாக்களித்து இருக்கின்றோம்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தவுடன் கூறி இருந்தார் தமிழ் மக்களது தமிழ் பேசும் மக்களது வாக்குகள் இல்லாமல் விட்டிருந்தால் நான் ஜனாதிபதியாக வந்திருக்க மாட்டேன் ஆறடி நிலத்திற்குள் படுத்திருப்பேன் என்று இறுதியில் என்ன செய்தார் 52 நாட்கள் அரசியல் குழப்பத்தில் மீண்டும் மஹிந்த ராஜபக்சவை மண்ணுக்குள் புதைக்க இருந்தவரை மீண்டும் பிரதமர் ஆக்கினார்.

நாங்கள் வாக்களித்தவர்களும் எமக்கு ஒன்றுமே செய்யவில்லை நாங்கள் வாக்களிக்காதவர்களும் நமக்கு ஒன்றுமே செய்யவில்லை ஆனால் இந்த கட்டம் நாங்கள் சிதறுண்டு கிடக்கின்றோம் வெங்காய மூட்டையை அவிழ்த்து விட்டால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு தமிழ் மக்கள் காணப்படுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் ஓரளவுக்கு ஒற்றுமையாக இருந்தோம் ஆனால் 2009 மே மாதம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்து ஆயிரக்கணக்கானவர்களை அங்கவினர்கள் ஆக்கி நூற்றுக்கணக்கானவர்களை தாங்களே ஒப்படைத்து அவர்கள் இன்று எங்கு இருக்கின்றார்கள் என்கின்ற நிலை இல்லாமல் கலை கலாச்சாரம் அத்தனை இழப்புகளுக்குப் பின்பு நாங்கள் எங்கு நிற்கின்றோம்.

இன்று கூட எமது பலத்தை நாங்கள் காட்டாமல் விட்டால் நாங்கள் மாத்திரமல்ல எமது எதிர்கால சந்ததி கூட நிம்மதியாக வாழ முடியாது. எனவே நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் அவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை அற்றவர்கள் தங்களது சுயநலத்திற்காகவும் தங்களுடைய கட்சி நலத்திற்காகவும் அரசியல் செய்பவர்கள் என்கின்ற ஒரு நிலைக்கு தாங்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

தற்போது மே தின கூட்டங்கள் இடம் பெற்று இருக்கின்றது ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் பாராளுமன்ற தேர்தலும் இடம் பெறும் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த விதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கட்சிகள் தனிநபர்கள் அடுத்த பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டம் அதிக பணம் செலவு செய்து பெருந்திரளான மக்களை சேர்த்து இருக்கின்றார்கள் அதனுடைய தலைவர் பிள்ளையான் அவர்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றார் தமிழரசு கட்சிக்கு. எங்களுக்கு இல்லை. தமிழரசு கட்சி சுக்கு நூறாகி இருக்கின்றது எங்களுடன் வந்து சேருங்கள் கிழக்கை மீட்பதற்கு என்று.

பிள்ளையான் நீங்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்த மக்களுக்காக உங்களது உடல் உயிர் ஆவி அத்தனையும் அர்ப்பணித்து இளம் வயதிலேயே போராட்டத்திற்கு சென்றீர்கள் திசை மாறப்பட்டு தற்போது அரசாங்கத்தின் எடுபுடியாக அடிவருடியாக இருக்கின்றீர்கள். கிழக்கை மீட்க போகின்றீர்கள் என்கின்றீர்கள் யாரிடம் இருந்து கிழக்கை மீட்க போகின்றீர்கள். கடந்த நான்கு வருடங்களாக ராஜாங்க அமைச்சராக இருந்து நீங்கள் எதை மீட்டு இருக்கின்றீர்கள் அல்லது இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கு குரல் கொடுத்திருக்கின்றீர்கள் அபிவிருத்தி செய்கின்றீர்கள் வீதி போடுகின்றீர்கள் மற்றும் வேலைகள் செய்கின்றீர்கள் அதற்குரிய தரகுகளை பெறுகின்றீர்கள் அந்த பணத்தை செலவழித்து மக்களை சேர்க்கின்றீர்கள் ஆனால் கிழக்கை மீட்கின்றோம் என்று எதனை மீட்டு இருக்கின்றீர்கள் என்பதனை கூறுங்கள் மக்களுக்கு உண்மையை கூறி அரசியல் செய்யுங்கள்.

உங்களை நான் எதிரியாக பார்க்கவில்லை ஆனால் தமிழ் மக்களது வாக்குகளை நீங்கள் பெற வேண்டுமானால் ஏற்கவனே பாதிக்கப்பட்டு நொந்து நூலாகி திக்கு திசை தெரியாமல் இருக்கும் தமிழ் மக்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.

ஏனென்றால் போராட்டத்திற்கு வந்த நீங்கள் மக்களுக்காக உயிரை விட வந்த நீங்கள் தமிழ் மக்களை ஒரு நாளும் ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டாம் என்பதனை உங்களுக்கான வேண்டுகோளாக விடுக்கின்றேன். தொடர்ச்சியாக நீங்கள் இந்த ஏமாற்று அரசியலை செய்தால் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கின்றது ஏனென்றால் நானும் நீங்கள் குழந்தை பிள்ளையாக உங்களது அம்மாவிடம் மடியில் இருக்கும் போது போராட்டத்திற்கு சென்றவன் அந்த வகையில் எனக்கு உரிமை இருக்கின்றது.

இன்னும் ஒரு ராஜாங்க அமைச்சர் அவர் வாகரைக்குச் சென்று இல்மனைட்டுக்கும் இறால் வளர்ப்பிற்கும் எதிராக மக்களை திரட்டி போராடி உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்துள்ளார.; ஒரு ராஜாங்க அமைச்சர் வெட்கம் இல்லையா நான் கேட்கின்றேன் நீங்கள் கூட தமிழ் மக்களது வாக்குகளினால் அரசியல் முகவரியை தேடிக் கொண்ட ஒருவர் 2015 ஆம் ஆண்டு தொண்டை கிழிய தமிழ் மக்கள் முன் கத்தி அரசியல் முகவரியை தேடிக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாக நாடகம் நடிக்கின்றீர்கள்.

உங்களது நாடகம் தெரியும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து புத்த பிக்குகளிடம் இருந்து அவர்களின் கைகளினால் இளநீர் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டீர்கள் இன்று வரை அது தொடர்பாக கூச்சலிடுகின்றீர்களே தவிர சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஹரிஷ் அவர்கள் செய்யும் வேலையை இங்கு இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்துடன் இருந்தும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது.

உங்களால் ஏதும் செய்ய முடியாமல் இருந்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் வெளியேறி மக்களோடு மக்களாக இருந்து போராடுங்கள் நாங்களும் ஒத்துழைப்பு தருகின்றோம்.

அரசாங்கத்தில் பக்கமும் இருக்க வேண்டும் இப்பக்கமும் இருக்க வேண்டும் தமிழ் மக்களது வாக்குகளும் தேவை ராஜாங்க அமைச்சராகவும் இருக்க வேண்டும் தயவு செய்து உங்களது நாடகங்களை நிறுத்துங்கள் தமிழ் மக்கள் பாவம்.

தந்தை செல்வா எப்போதோ கூறினாராம் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று உங்களைப் போல ஆட்கள் இருந்தால் எக்காலத்திலும் கடவுளால் மாத்திரமல்ல எவராலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாத நிலை வரும் எனவே இன்று ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் எம்முடன் இல்லை அவருடைய எண்ணம் முழுவதும் நன்றாக இருந்தது இன்றும் எங்களை அவரது எண்ணங்கள் வழி நடத்திக் கொண்டு வருகின்றது.  - என அவர் தெரிவித்துள்ளார்.

13 ஐ அமுல்படுத்த தயாராக உள்ள சஜித் - ஆனால் அதனை மனோகணேசனூடாக வெளிப்படுத்தியது தவறு - கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றார் ஆனால் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில்  மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சபாரத்தினம் அவர்கள் ஒற்றுமையை விரும்பியவர் என்பதற்காக தமிழீழ இயக்க இந்த வாரத்தை தமிழ் தேசிய ஒற்றுமை வாரம் என்பதாக பிரகடனப்படுத்தி இந்த வாரத்தை நாங்கள் அவரது நினைவாக அனுஷ்டித்து கொண்டு வருகின்றோம்.உண்மையில் இன்று தமிழ் ஈழத்திற்காக போராடிய நாங்கள் எங்கு நிற்கின்றோம் என்றால் திசை தெரியாமல் நடு சந்தியிலே தமிழ் கட்சிகள் மாத்திரம் அல்ல தமிழ் மக்களும் நின்று கொண்டிருக்கின்றார்கள்.87 ஜூலை கால கட்டங்களில் அந்தப் போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது.இந்தியா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கடல் வழியாக அனுப்பியது அந்தக் கப்பல் இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பபட்டதுடன் ஆகாய மார்க்கமாக உணவு பொட்டலங்கள் போடப்பட்டது. அது ஜே.ஆர் ஜெயவர்த்தனவிற்கு கொடுக்கப்பட்ட ஒரு மிரட்டல் அந்த மிரட்டலுடன் தான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.1983 ஆம் ஆண்டு ஜூலை ஏற்பட்ட கலவரத்திற்கும் 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தத்திற்கும் இடைப்பட்ட காலம் நான்கு வருடங்கள் இந்த காலத்தில் வட கிழக்கிலே போரினால் கொல்லப்பட்ட தமிழர்கள் என்றால் ஒரு சிலர் நூற்றுக்கணக்கானவர்கள் மாத்திரம் தான் அது மாத்திரமல்லாமல் ஒரு தலைவர் கொல்லப்பட்டார் என்றால் சபாரத்தினம் மாத்திரம் தான்.நாங்கள் எங்களது போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களில் தவற விட்டு இருக்கின்றோம். அதில் ஒரு சந்தர்ப்பம் தான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை நாங்கள் அன்று எங்களுடைய இன பிரச்சனைக்குரிய தீர்வு காண ஒரு ஆரம்ப புள்ளியாக நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று வட கிழக்கு இருக்கின்ற நிலைமை வேறாக இருந்திருக்கும்.ஆனால் நாங்கள் அதனை தவற விட்டது என்று நாங்கள் இருக்கும் நிலையை தற்போது எங்களது பிரதேசங்களை எங்களது மாவட்டங்களை எங்களது நிலங்களை எங்களது எல்லை புறங்களை காப்பாற்ற முடியாத நிலையில் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை யாவது முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று.ஆனால் இந்த வருடம் முடிவதற்கு முன்பு இந்த நாட்டின் புதியதொரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது.தற்போது களத்தில் எங்களுக்கு தெரிய மூன்று வேட்பாளர்கள் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திசாநாயக்க இவர்கள் தமிழ் மக்களுக்கு அவர்களது புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண்பதற்கு என்ன வழி என்று சிந்திப்பதை விடுத்து தமிழ் மக்களது வாக்குகளை எவ்வாறு பெறலாம் என்றே சிந்தனையிலே இருக்கின்றார்கள்.இந்த நாடு பொருளாதார ரீதியாக கடந்த மூன்று வருடங்களாக அதல பாதாளத்திற்கு சிக்கி தவிக்கின்றது இந்த பொருளாதார வங்குரோத்து நிலைமைக்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர துடிப்பவர்கள் சிந்திக்கின்றார்கள் இல்லை இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை தான் முக்கியமான காரணம் என்று.30 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசு போர் செய்திருக்கின்றது ஜே.ஆர்.ஜெயவர்த்தன போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று அந்தப் போரை தொடங்கினார். அந்தப் போருக்காக இலங்கை அரசாங்கம் எத்தனை மில்லியன் டொலர்களை ஆயுதங்களுக்காக ஆமிக்காரருகாக கிபீர் விமானங்களுக்காக குண்டுகளுக்காக ஏவுகணைக்காக பல்குழல் துப்பாக்கிகளுக்காக எத்தனை பில்லியன் டொலர்களை செலவழித்து இருப்பார்கள் அதனால் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் பாதிப்பு என்ன என்பதனை புரிந்து கொள்ளாமல் தற்போதும் வடகிழக்கு மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வரும் போது கூறினார் இங்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை பொருளாதார ரீதியாக அவர்கள் வலுப்பெற்றால் சரி என்று ஆனால் தற்போது ஒரு ஜனாதிபதி வேட்பாளராக ஒரு ஜனாதிபதி கனவோடு இருக்கும் அனுரகுமார திசாநாயக்க கிளிநொச்சியில் கூறுகின்றார் தான் அரசுக்கு வந்தால் மூன்று வேளை சாப்பாடு கொடுப்பேன் என்று அப்போது இந்த மக்கள் வடகிழக்கு மக்கள் சோத்துக்காக தான் போராடினார்கள் என்பது அவருடைய கணிப்பு.அதேபோன்று சஜித் பிரேமதாச கூறியதாக மனோ கணேசன் கூறுகின்றார் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்று.அதனை இவர் கூறக்கூடாது தமிழ் தேசியத்திற்காக தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் ஆக குறைந்தது அதன் மூன்றாவது திருத்தச் சட்டத்தையாவது அந்த திருத்தச் சட்டத்தில் உள்ளதை உள்ளபடி முழுவதுமாக நான் அமுல்படுத்துவேன் என்பதனை எங்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கும் எங்களுக்கு ஒரு கதை வட கிழக்கிற்கு ஒரு கதை தெற்கிற்கு ஒரு கதை கூறாமல் பகிரங்கமாக அறிவித்து அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை கொண்டு வர வேண்டும்.ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேசும் போது போலீஸ் அதிகாரம் தவிர்த்து ஏனையவற்றை அமல்படுத்துவதாக கூறுகின்றார் போலீஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்தி என்ன பிரயோசனம் என்பதனை அனுபவ ரீதியாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் மத்திய அரசுக்கு கீழ் இருக்கும் காவல்துறையினர் போலீசார் நீதிமன்றங்களினால் பிறக்கப்படும் கட்டளைகளை கூட தமிழ் மக்களுக்கு சாதகமாக சார்பாக அவர்களது நியாயங்களை புரிந்து கொண்டு விடுவிக்கப்படும் கட்டளைகளை கூட இந்த போலீசார் அமுல் படுத்துகின்றார்கள் இல்லை. குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக விகாரை கட்டக் கூடாது என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது அதையும் பார்க்காமல் இந்த பாதுகாப்பு படைகளின் ஆதரவுடன் புத்த பிக்குகள் தொடர்ச்சியாக விகாரையை கட்டினார்கள். மயிலத்தமடு மாதவனை பகுதியிலே அத்துமீறி குடியேறி சேனை பயிர்ச்செய்கையில் எங்களுடைய பண்ணையாளர்களை விரட்டி அடிக்கின்றார்கள் அவர்களது மாடுகளை சுட்டும் வெட்டியும் கொல்கின்றார்கள்.இன்று 240 நாட்களைக் கடந்து அந்த பண்ணையாளர்கள் வீதியிலே தங்களுக்கு நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றார்கள் ஏறாவூர் நீதிமன்றம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு கட்டளை பிறப்பிக்கின்றது அங்கு அத்துமீறிய குடியேற்றங்களை வெளியேற்றுமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தயாராக இருந்தாலும் அதற்கு பாதுகாப்பு படையினர் ஒத்துழைப்பு இல்லை.இவ்வாறான நேரத்தில் ஒரு மாகாணத்திற்கு அதிகாரங்களை கொடுத்துவிட்டு பாதுகாப்பு படைகளை அந்த போலீசாரின் அதிகாரங்களை கொடுக்காமல் விட்டால் அந்த அதிகாரத்தை கொடுத்து அந்த மாகாணங்கள் தன்னுடைய நிர்வாகத்தை எவ்வாறு நடத்துவது என்பது கூட சிந்திக்காமல் இந்த ஜனாதிபதி ராயல் விக்ரமசிங்க இந்த கூற்றை கூறுகின்றார் என்றால் இவர்களுக்கு தமிழ் மக்கள் மீது என்ன அக்கறை இருக்கின்றது.இதற்காகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே நாங்கள் எங்களது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் இத்தனை இழப்புக்களுக்கு பின்பும் நாங்கள் சுயமாக செயல்படுவதற்காக தயாராக இருக்கின்றோம் எங்களது உரிமைகளை மாறி மாறி இந்த நாட்டை ஆளும் அரசுகள் பறிக்கின்றார்கள் என்பதனை நாங்கள் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் உணர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.எங்களினால் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வரப்போவதில்லை அது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆனாலும் எங்களால் வாக்களிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி எங்களுக்கு எதுவும் செய்யப் போவதில்லை.ஏனென்றால் இந்த நாட்டிலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களினால் ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்கள் இந்த வரலாற்றில் முதன் முதலாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால மற்றும் கோட்டபாய தற்போது இருப்பவர் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டவர்.இந்த ஆறு ஜனாதிபதிகளில் இரண்டு ஜனாதிபதிகள் தெளிவாகுவதற்கு நாங்கள் வாக்களித்து இருக்கின்றோம் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன இவர்களுக்கு நாங்கள் வாக்களித்து இருக்கின்றோம்.மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தவுடன் கூறி இருந்தார் தமிழ் மக்களது தமிழ் பேசும் மக்களது வாக்குகள் இல்லாமல் விட்டிருந்தால் நான் ஜனாதிபதியாக வந்திருக்க மாட்டேன் ஆறடி நிலத்திற்குள் படுத்திருப்பேன் என்று இறுதியில் என்ன செய்தார் 52 நாட்கள் அரசியல் குழப்பத்தில் மீண்டும் மஹிந்த ராஜபக்சவை மண்ணுக்குள் புதைக்க இருந்தவரை மீண்டும் பிரதமர் ஆக்கினார்.நாங்கள் வாக்களித்தவர்களும் எமக்கு ஒன்றுமே செய்யவில்லை நாங்கள் வாக்களிக்காதவர்களும் நமக்கு ஒன்றுமே செய்யவில்லை ஆனால் இந்த கட்டம் நாங்கள் சிதறுண்டு கிடக்கின்றோம் வெங்காய மூட்டையை அவிழ்த்து விட்டால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு தமிழ் மக்கள் காணப்படுகின்றனர்.2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்கள் ஓரளவுக்கு ஒற்றுமையாக இருந்தோம் ஆனால் 2009 மே மாதம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை இழந்து ஆயிரக்கணக்கானவர்களை அங்கவினர்கள் ஆக்கி நூற்றுக்கணக்கானவர்களை தாங்களே ஒப்படைத்து அவர்கள் இன்று எங்கு இருக்கின்றார்கள் என்கின்ற நிலை இல்லாமல் கலை கலாச்சாரம் அத்தனை இழப்புகளுக்குப் பின்பு நாங்கள் எங்கு நிற்கின்றோம்.இன்று கூட எமது பலத்தை நாங்கள் காட்டாமல் விட்டால் நாங்கள் மாத்திரமல்ல எமது எதிர்கால சந்ததி கூட நிம்மதியாக வாழ முடியாது. எனவே நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் அவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை அற்றவர்கள் தங்களது சுயநலத்திற்காகவும் தங்களுடைய கட்சி நலத்திற்காகவும் அரசியல் செய்பவர்கள் என்கின்ற ஒரு நிலைக்கு தாங்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.தற்போது மே தின கூட்டங்கள் இடம் பெற்று இருக்கின்றது ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் பாராளுமன்ற தேர்தலும் இடம் பெறும் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த விதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கட்சிகள் தனிநபர்கள் அடுத்த பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டம் அதிக பணம் செலவு செய்து பெருந்திரளான மக்களை சேர்த்து இருக்கின்றார்கள் அதனுடைய தலைவர் பிள்ளையான் அவர்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றார் தமிழரசு கட்சிக்கு. எங்களுக்கு இல்லை. தமிழரசு கட்சி சுக்கு நூறாகி இருக்கின்றது எங்களுடன் வந்து சேருங்கள் கிழக்கை மீட்பதற்கு என்று.பிள்ளையான் நீங்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்த மக்களுக்காக உங்களது உடல் உயிர் ஆவி அத்தனையும் அர்ப்பணித்து இளம் வயதிலேயே போராட்டத்திற்கு சென்றீர்கள் திசை மாறப்பட்டு தற்போது அரசாங்கத்தின் எடுபுடியாக அடிவருடியாக இருக்கின்றீர்கள். கிழக்கை மீட்க போகின்றீர்கள் என்கின்றீர்கள் யாரிடம் இருந்து கிழக்கை மீட்க போகின்றீர்கள். கடந்த நான்கு வருடங்களாக ராஜாங்க அமைச்சராக இருந்து நீங்கள் எதை மீட்டு இருக்கின்றீர்கள் அல்லது இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்காக எங்கு குரல் கொடுத்திருக்கின்றீர்கள் அபிவிருத்தி செய்கின்றீர்கள் வீதி போடுகின்றீர்கள் மற்றும் வேலைகள் செய்கின்றீர்கள் அதற்குரிய தரகுகளை பெறுகின்றீர்கள் அந்த பணத்தை செலவழித்து மக்களை சேர்க்கின்றீர்கள் ஆனால் கிழக்கை மீட்கின்றோம் என்று எதனை மீட்டு இருக்கின்றீர்கள் என்பதனை கூறுங்கள் மக்களுக்கு உண்மையை கூறி அரசியல் செய்யுங்கள்.உங்களை நான் எதிரியாக பார்க்கவில்லை ஆனால் தமிழ் மக்களது வாக்குகளை நீங்கள் பெற வேண்டுமானால் ஏற்கவனே பாதிக்கப்பட்டு நொந்து நூலாகி திக்கு திசை தெரியாமல் இருக்கும் தமிழ் மக்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்.ஏனென்றால் போராட்டத்திற்கு வந்த நீங்கள் மக்களுக்காக உயிரை விட வந்த நீங்கள் தமிழ் மக்களை ஒரு நாளும் ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டாம் என்பதனை உங்களுக்கான வேண்டுகோளாக விடுக்கின்றேன். தொடர்ச்சியாக நீங்கள் இந்த ஏமாற்று அரசியலை செய்தால் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கின்றது ஏனென்றால் நானும் நீங்கள் குழந்தை பிள்ளையாக உங்களது அம்மாவிடம் மடியில் இருக்கும் போது போராட்டத்திற்கு சென்றவன் அந்த வகையில் எனக்கு உரிமை இருக்கின்றது.இன்னும் ஒரு ராஜாங்க அமைச்சர் அவர் வாகரைக்குச் சென்று இல்மனைட்டுக்கும் இறால் வளர்ப்பிற்கும் எதிராக மக்களை திரட்டி போராடி உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்துள்ளார.; ஒரு ராஜாங்க அமைச்சர் வெட்கம் இல்லையா நான் கேட்கின்றேன் நீங்கள் கூட தமிழ் மக்களது வாக்குகளினால் அரசியல் முகவரியை தேடிக் கொண்ட ஒருவர் 2015 ஆம் ஆண்டு தொண்டை கிழிய தமிழ் மக்கள் முன் கத்தி அரசியல் முகவரியை தேடிக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதாக நாடகம் நடிக்கின்றீர்கள்.உங்களது நாடகம் தெரியும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து புத்த பிக்குகளிடம் இருந்து அவர்களின் கைகளினால் இளநீர் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டீர்கள் இன்று வரை அது தொடர்பாக கூச்சலிடுகின்றீர்களே தவிர சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஹரிஷ் அவர்கள் செய்யும் வேலையை இங்கு இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்துடன் இருந்தும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது.உங்களால் ஏதும் செய்ய முடியாமல் இருந்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் வெளியேறி மக்களோடு மக்களாக இருந்து போராடுங்கள் நாங்களும் ஒத்துழைப்பு தருகின்றோம்.அரசாங்கத்தில் பக்கமும் இருக்க வேண்டும் இப்பக்கமும் இருக்க வேண்டும் தமிழ் மக்களது வாக்குகளும் தேவை ராஜாங்க அமைச்சராகவும் இருக்க வேண்டும் தயவு செய்து உங்களது நாடகங்களை நிறுத்துங்கள் தமிழ் மக்கள் பாவம்.தந்தை செல்வா எப்போதோ கூறினாராம் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று உங்களைப் போல ஆட்கள் இருந்தால் எக்காலத்திலும் கடவுளால் மாத்திரமல்ல எவராலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாத நிலை வரும் எனவே இன்று ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் எம்முடன் இல்லை அவருடைய எண்ணம் முழுவதும் நன்றாக இருந்தது இன்றும் எங்களை அவரது எண்ணங்கள் வழி நடத்திக் கொண்டு வருகின்றது.  - என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement