• Apr 02 2025

மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்த சஜித்தின் கட்சி திட்டம்!

Chithra / Jul 11th 2024, 4:01 pm
image


ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜூலை இறுதிக்குள் மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனவும், கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

அதேவேளை, ஆளுந்தரப்பு மற்றும் இதர கட்சிகளில் இருந்து 10 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைவார்கள் எனவும் அறியமுடிகின்றது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக சஜித் பிரேமதாஸ நேரடி பேச்சுகளில் ஈடுபடவுள்ளார் எனவும் மேலும் அறியமுடிகின்றது.

மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்த சஜித்தின் கட்சி திட்டம் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜூலை இறுதிக்குள் மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.அதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது எனவும், கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.அதேவேளை, ஆளுந்தரப்பு மற்றும் இதர கட்சிகளில் இருந்து 10 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைவார்கள் எனவும் அறியமுடிகின்றது.அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக சஜித் பிரேமதாஸ நேரடி பேச்சுகளில் ஈடுபடவுள்ளார் எனவும் மேலும் அறியமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement