• Sep 17 2024

தாயை தள்ளிவிட்டு மகளை கடத்தி சென்ற இளைஞன் - வீதியில் வழிமறித்து அட்டகாசம்

Chithra / Jul 11th 2024, 4:49 pm
image

Advertisement

 

முச்சக்கரவண்டியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.

இந்த சிறுமி, சந்தேகநபரான இளைஞனுடன் இதற்கு முன்னர் தப்பியோடியிருந்த நிலையில்,

அச்சிறுமியை மீட்ட பொலிஸார் நன்னடத்தைக்கு உட்படுத்தியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று முச்சக்கரவண்டியில் வந்த இளைஞனும் அவருடைய தந்தையும், முச்சக்கரவண்டியை வீதியின் குறுக்காக நிறுத்தி,

மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்த சிறுமி​யின் தாயை தள்ளிவிட்டு, சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர்.  

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, முச்சக்கரவண்டி சாரதி​யான இளைஞனின் தந்தை   கைது செய்யப்பட்டுள்ளார். 

எனினும் அவ் இளைஞன் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவித்த புத்தல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டு வருவதாக தெரிவித்தனர்.    

தாயை தள்ளிவிட்டு மகளை கடத்தி சென்ற இளைஞன் - வீதியில் வழிமறித்து அட்டகாசம்  முச்சக்கரவண்டியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.இந்த சிறுமி, சந்தேகநபரான இளைஞனுடன் இதற்கு முன்னர் தப்பியோடியிருந்த நிலையில்,அச்சிறுமியை மீட்ட பொலிஸார் நன்னடத்தைக்கு உட்படுத்தியிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் சம்பவ தினத்தன்று முச்சக்கரவண்டியில் வந்த இளைஞனும் அவருடைய தந்தையும், முச்சக்கரவண்டியை வீதியின் குறுக்காக நிறுத்தி,மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்த சிறுமி​யின் தாயை தள்ளிவிட்டு, சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, முச்சக்கரவண்டி சாரதி​யான இளைஞனின் தந்தை   கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவ் இளைஞன் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவித்த புத்தல பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டு வருவதாக தெரிவித்தனர்.    

Advertisement

Advertisement

Advertisement