• Nov 26 2024

கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகத்தை கட்டியெழுப்பல் "என்ற தொனிப்பொருளில் சக்வச என்ற செயற்றிட்டம்!

Tamil nila / Jun 9th 2024, 8:24 pm
image

"நவீன உலகின் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந் நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகத்தை கட்டியெழுப்ப " என்ற தொனிப்பொருளில் சக்வச என்ற செயற்றிட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வருகை இன்று சென் சார்ல்ஸ் மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ,  ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் உமா சந்திர பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

5 கணினிகளும் ,1 அச்சுப்பொறியும் ,  smart board உம் வழங்கப்பட்டதோடு புதிய ஸ்மார்ட் வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டு  இன்று உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முதலில் சஜித் பிரேமதாஸ அவர்களால் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதோடு அதனை அடுத்து தொடர்ந்தும் பாடசாலை மாணவிகளால் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.அதனை அடுத்து பாடசாலை மாணவி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்தும் பாடசாலை அதிபர் லெனின் குமார் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. 

பாடசாலை அதிபர் அவர்கள் உரையின் போது மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை பெற்றுத் தந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும், அவ் உபகரணங்களை பெற்றுக் கொள்ள துணையாக இருந்த கிருபாகரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு , மேலும் பாடசாலையில் பெளதிக வள பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்து தருமாறும் பாடசாலை அதிபர் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்தும்  கிருபாகரன் அவர்களாலும் உரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்தும் பாடசாலை அதிபர் அவர்களால் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை வழங்கப்பட்டது.

கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகத்தை கட்டியெழுப்பல் "என்ற தொனிப்பொருளில் சக்வச என்ற செயற்றிட்டம் "நவீன உலகின் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந் நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகத்தை கட்டியெழுப்ப " என்ற தொனிப்பொருளில் சக்வச என்ற செயற்றிட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வருகை இன்று சென் சார்ல்ஸ் மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ,  ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் உமா சந்திர பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.5 கணினிகளும் ,1 அச்சுப்பொறியும் ,  smart board உம் வழங்கப்பட்டதோடு புதிய ஸ்மார்ட் வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டு  இன்று உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து முதலில் சஜித் பிரேமதாஸ அவர்களால் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதோடு அதனை அடுத்து தொடர்ந்தும் பாடசாலை மாணவிகளால் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.அதனை அடுத்து பாடசாலை மாணவி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.தொடர்ந்தும் பாடசாலை அதிபர் லெனின் குமார் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. பாடசாலை அதிபர் அவர்கள் உரையின் போது மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை பெற்றுத் தந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும், அவ் உபகரணங்களை பெற்றுக் கொள்ள துணையாக இருந்த கிருபாகரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு , மேலும் பாடசாலையில் பெளதிக வள பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்து தருமாறும் பாடசாலை அதிபர் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.தொடர்ந்தும்  கிருபாகரன் அவர்களாலும் உரை நிகழ்த்தப்பட்டது.தொடர்ந்தும் பாடசாலை அதிபர் அவர்களால் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement