• Jan 23 2025

சம்மாந்துறை பிரதேச செயலக கிளீன் ஸ்ரீ லங்கா" தெளிவூட்டும் நிகழ்வு

Tharmini / Jan 22nd 2025, 1:30 pm
image

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் "கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத்திட்டமானது சுற்றாடல் மற்றும் சமூக மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டின் தரப்படுத்தல் நோக்கங்களை முதன்மையாக கொண்டு "அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் தொனிப்பொருளில் அதி மேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் "கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சி நெறி நேற்று (21) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா   தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்டை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.

அழகான தீவு சிரிக்கும் மக்கள் எனும் கருப்பொருளை அடைவதற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற் திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல் பிரதேச செயலாளரினால் விளக்கங்கள் வழங்கப்பட்டது. நீடித்த சமூக கலாசாரத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தனிநபர் மாற்றத்தினுடாக அதனை ஏற்படுத்த வேண்டும் என இதன் போது கருத்து பிரதேச செயலாளரினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் (LLB),கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி பட்டறையானது முதல் கட்டமாக பிரதேச செயலகத்தில் உள்ள நிர்வாக பிரிவு,மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு,தேசிய அடையாள அட்டைப் பிரிவு, அஸ்வெசும ஆகிய கிளைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டமாக பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சி நெறி  பிற்பகல் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லமினால் நிகழ்த்தப்பட்டது.




சம்மாந்துறை பிரதேச செயலக கிளீன் ஸ்ரீ லங்கா" தெளிவூட்டும் நிகழ்வு புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் "கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத்திட்டமானது சுற்றாடல் மற்றும் சமூக மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டின் தரப்படுத்தல் நோக்கங்களை முதன்மையாக கொண்டு "அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் தொனிப்பொருளில் அதி மேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இக் "கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சி நெறி நேற்று (21) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா   தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்டை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.அழகான தீவு சிரிக்கும் மக்கள் எனும் கருப்பொருளை அடைவதற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற் திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல் பிரதேச செயலாளரினால் விளக்கங்கள் வழங்கப்பட்டது. நீடித்த சமூக கலாசாரத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தனிநபர் மாற்றத்தினுடாக அதனை ஏற்படுத்த வேண்டும் என இதன் போது கருத்து பிரதேச செயலாளரினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம் (LLB),கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா கலந்து கொண்டனர்.இப் பயிற்சி பட்டறையானது முதல் கட்டமாக பிரதேச செயலகத்தில் உள்ள நிர்வாக பிரிவு,மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு,தேசிய அடையாள அட்டைப் பிரிவு, அஸ்வெசும ஆகிய கிளைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்டது.இதன் இரண்டாம் கட்டமாக பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சி நெறி  பிற்பகல் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லமினால் நிகழ்த்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement