• Dec 09 2024

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா மறைவு...!

Sharmi / May 10th 2024, 4:11 pm
image

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று(10)  காலமானார் .

மருதமுனையைச் சேர்ந்த உமர் மௌலானா திடீர் சுகவீனமுற்று கடந்த ஒரு சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் இன்று நண்பகல் 12 மணியளவில் காலமானார்.

உமர் மௌலானா 1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வந்தார்.

2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபராக சீரிய சேவையாற்றியிருந்தார்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் ஒன்பதாவது  பணிப்பாளராக 20.01. 2023 சேவையில் இணைந்தார் .

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 60 வயதில் ஓய்வு பெறவிருந்தார்.

சம்மாந்துறை வலயத்தில் 15 மாதங்கள் கடமையாற்றி வந்த வேளையில் எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு  சம்மாந்துறை வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் - கவ்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா மறைவு. சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று(10)  காலமானார் .மருதமுனையைச் சேர்ந்த உமர் மௌலானா திடீர் சுகவீனமுற்று கடந்த ஒரு சில தினங்களாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் இன்று நண்பகல் 12 மணியளவில் காலமானார்.உமர் மௌலானா 1984 இல் ஆசிரியராக நியமனம் பெற்று அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வந்தார்.2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்.மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபராக சீரிய சேவையாற்றியிருந்தார்.சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் ஒன்பதாவது  பணிப்பாளராக 20.01. 2023 சேவையில் இணைந்தார் .எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 60 வயதில் ஓய்வு பெறவிருந்தார்.சம்மாந்துறை வலயத்தில் 15 மாதங்கள் கடமையாற்றி வந்த வேளையில் எஸ் எம் எம். உமர் மௌலானா இன்று காலமானார்.இந்நிலையில் அவரது மறைவுக்கு  சம்மாந்துறை வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் - கவ்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அனைவரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement