• Nov 13 2024

அம்பாறையில் கைப்பற்றப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள்- இருவர் கைது..!

Sharmi / Nov 8th 2024, 10:50 am
image

அம்பாறையில் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் பொதி செய்யப்பட்ட சுமார் 32 ஆயிரம் வாக்கு சீட்டுக்களுடன் இரு சந்தேக நபர்களை நேற்றையதினம்(7) மாலை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் ஒரு முஸ்லீம் தேசிய கட்சி ஒன்றின் சின்னத்திற்கும், இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன்,  மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அம்பாறையில் கைப்பற்றப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள்- இருவர் கைது. அம்பாறையில் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட 32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்கு அருகில் தேடுதல் மேற்கொண்ட நிலையில் பொதி செய்யப்பட்ட சுமார் 32 ஆயிரம் வாக்கு சீட்டுக்களுடன் இரு சந்தேக நபர்களை நேற்றையதினம்(7) மாலை பொலிஸார் கைது செய்திருந்தனர்.இவ்வாறு மீட்கப்பட்ட மாதிரி வாக்கு சீட்டில் ஒரு முஸ்லீம் தேசிய கட்சி ஒன்றின் சின்னத்திற்கும், இலக்கம் இரண்டிற்கும் புள்ளடி இடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன்,  மீட்கப்பட்ட சட்டவிரோதமான வாக்குச்சீட்டுக்கள் யாவும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement