• May 11 2024

கனடா மக்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia

Chithra / Apr 13th 2023, 1:41 pm
image

Advertisement

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மின் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மிகவும் குறைந்த மின் கட்டண அறவீட்டுத் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் இந்த கட்டண அறவீட்டு சலுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஈ-வாகனங்களை சார்ஜ் செய்து கொள்வதற்கும், ஷிப்ட் முறையிலான பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் இந்த திட்டம் நன்மை அளிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டணத் திட்டத்தின் மூலம் சுமார் 90 டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மாகாண போக்குவரத்து அமைச்சர் டொட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.


இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரையில் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சலுகைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல் இந்த கட்டண அறவீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கனடா மக்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மின் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.இதன்படி, மிகவும் குறைந்த மின் கட்டண அறவீட்டுத் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் இந்த கட்டண அறவீட்டு சலுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஈ-வாகனங்களை சார்ஜ் செய்து கொள்வதற்கும், ஷிப்ட் முறையிலான பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் இந்த திட்டம் நன்மை அளிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த கட்டணத் திட்டத்தின் மூலம் சுமார் 90 டொலர்கள் வரையில் சேமிக்க முடியும் என மாகாண போக்குவரத்து அமைச்சர் டொட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரையில் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு சலுகைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் முதல் இந்த கட்டண அறவீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement