• Oct 18 2024

50 மின்சார பஸ்களை பாவனையில் ஈடுபடுத்தும் 'ஈ-பேருந்து' முன்னோடித் திட்டம் ஆரம்பம் samugammedia

Chithra / Jul 26th 2023, 7:17 am
image

Advertisement

வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (25) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, வினைத்திறன் மிக்க போக்குவரத்து சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதே எமது பிரதான நோக்கமாகும் என்றும், அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எமது நாட்டில் மின்சார பேரூந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தமது கட்டணங்களை பண அட்டை மூலம் செலுத்தக் கூடிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


வாகன இறக்குமதியின்போது இடம்பெறும் பல்வேறு மோசடிகளைத் தவிர்க்க “ஈ மோட்டரிங்” என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி வாகனத்தை இறக்குமதி செய்யும் போதே அது தொடர்பான தரவுகள் பதிவு செய்யப்படக்கூடிய வகையில், இந்த “ஈ-மோட்டரிங்” வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதுடன், இதன் ஊடாக வாகன இறக்குமதி மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் முழுமையாக கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த காலங்களில் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த செவிப்புலன் குறைபாடுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி, விசேட அமைச்சரவை அங்கீகாரத்துடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை நமது நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் செயற்பாடு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தற்போது போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இணங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கை மேல்மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டதாகவும் அடுத்த ஆண்டு இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சாரதிகளுக்கு விபத்துகளின் போது செயற்படுத்த வேண்டிய முதலுதவிப் பணிகள் தொடர்பில் தெளிவூட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையின்போது முதலுதவி தொடர்பான வினாக்களை உள்ளடக்க உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து இதற்கான பணிகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


50 மின்சார பஸ்களை பாவனையில் ஈடுபடுத்தும் 'ஈ-பேருந்து' முன்னோடித் திட்டம் ஆரம்பம் samugammedia வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்  (25) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, வினைத்திறன் மிக்க போக்குவரத்து சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதே எமது பிரதான நோக்கமாகும் என்றும், அதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.எமது நாட்டில் மின்சார பேரூந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், தற்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்கள் தமது கட்டணங்களை பண அட்டை மூலம் செலுத்தக் கூடிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.வாகன இறக்குமதியின்போது இடம்பெறும் பல்வேறு மோசடிகளைத் தவிர்க்க “ஈ மோட்டரிங்” என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி வாகனத்தை இறக்குமதி செய்யும் போதே அது தொடர்பான தரவுகள் பதிவு செய்யப்படக்கூடிய வகையில், இந்த “ஈ-மோட்டரிங்” வேலைத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதுடன், இதன் ஊடாக வாகன இறக்குமதி மூலம் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் முழுமையாக கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த காலங்களில் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த செவிப்புலன் குறைபாடுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி, விசேட அமைச்சரவை அங்கீகாரத்துடன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.இதுவரை நமது நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியும் செயற்பாடு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தற்போது போதைப்பொருள் பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை இணங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கை மேல்மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டதாகவும் அடுத்த ஆண்டு இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.சாரதிகளுக்கு விபத்துகளின் போது செயற்படுத்த வேண்டிய முதலுதவிப் பணிகள் தொடர்பில் தெளிவூட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர பரீட்சையின்போது முதலுதவி தொடர்பான வினாக்களை உள்ளடக்க உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து இதற்கான பணிகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement