• May 19 2024

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு! இனிச் சிக்கல்! samugammedia

Chithra / Jul 26th 2023, 7:25 am
image

Advertisement

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர் கடந்த மாதத்திற்கான சட்டமூலங்களை நேற்று முன்தினம் காலை ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டமூலங்கள் எதனையும் ஜனாதிபதி அலுவலகம் இப்போது தீர்த்து வைக்காது என முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் உத்தரவின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே வழங்கப்படும்.


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அரசின் அதிரடி முடிவு இனிச் சிக்கல் samugammedia இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர் கடந்த மாதத்திற்கான சட்டமூலங்களை நேற்று முன்தினம் காலை ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டமூலங்கள் எதனையும் ஜனாதிபதி அலுவலகம் இப்போது தீர்த்து வைக்காது என முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்நிலையில் உத்தரவின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே வழங்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement