• Nov 23 2024

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ..!samugammedia

mathuri / Jan 26th 2024, 5:29 am
image

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மார்பு மற்றும் இடது காலில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பிரதம வைத்திய நிபுணரான சட்ட வைத்தியர் ரமேஷ் அழகியவண்ண, சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  சிலாபம் - ஆராச்சிகட்டுவ ராஜக தலுவ தேவாலயத்தில்,  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. 

இதனிடையே இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு , அன்னாரின் பூதவுடல், சிலாபம் ஆராச்சிகட்டுவவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்றையதினம் காலை 10 மணியளவில் எடுத்துச்செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை .samugammedia இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மார்பு மற்றும் இடது காலில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பிரதம வைத்திய நிபுணரான சட்ட வைத்தியர் ரமேஷ் அழகியவண்ண, சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் இதனைக் தெரிவித்துள்ளார்.இதேவேளை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  சிலாபம் - ஆராச்சிகட்டுவ ராஜக தலுவ தேவாலயத்தில்,  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. இதனிடையே இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு , அன்னாரின் பூதவுடல், சிலாபம் ஆராச்சிகட்டுவவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்றையதினம் காலை 10 மணியளவில் எடுத்துச்செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement