யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பன் பகுதியில் சுமார் 200m வரை கொட்டப்பட்ட மணல் மண்ணினால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தான நிலை காணப்படுகிறது.
குறித்த காப்பேற் வீதியால் பயணம் செய்யும் வேளை குறித்த மணல் பகுதியை கடந்து செல்லும் போது இரு சக்கர வாகனங்கள் சறுக்கல் நிலை ஏற்பட்டு விபத்துக்குட்படக்கூடிய மிகவும் ஆபத்தான நிலை காணப்படுகின்றது
நேற்று தொடக்கம் குறித்த பகுதியில் வீதியில் மணல் கொட்டப்பட்டு பரப்பப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
எப்படி கொட்டப்பட்டது என்பது தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
சட்டவிரோதமாக மணல் கடத்தல் காரர்கள் மணல் மண்ணை ஏற்றிச் செல்லும் போது நடவடிக்கை vடுக்க வேண்டிய தரப்புக்களால் துரத்திச் சென்றவேளை வீதியில் கடத்தல்காரர்கள் மணலை கொட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த மணல் மண் வீதியில் கொட்டப்பட்டதை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையோ, பருத்தித்துறை பிரதேச சபையோ, அல்லது மருதங்கேணி பொலிசாரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பகல் வேளைகளில் ஒரளவு வாகனங்களை செலுத்தக் கூடிய நிலை இருந்தாலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது மிக மிக ஆபத்தான பயணமாகவே இருக்க போகின்றது.
இதனால் கவனயீனமாக பயணிக்க கூடிய ஒருவர் குறித்த வீதியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையை அடையக் கூடிய நிலமை காணப்படுகின்றது.
மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் கொட்டப்பட்ட மணலால் பரபரப்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பருத்தித்துறை வீதியில் அம்பன் பகுதியில் சுமார் 200m வரை கொட்டப்பட்ட மணல் மண்ணினால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தான நிலை காணப்படுகிறது.குறித்த காப்பேற் வீதியால் பயணம் செய்யும் வேளை குறித்த மணல் பகுதியை கடந்து செல்லும் போது இரு சக்கர வாகனங்கள் சறுக்கல் நிலை ஏற்பட்டு விபத்துக்குட்படக்கூடிய மிகவும் ஆபத்தான நிலை காணப்படுகின்றதுநேற்று தொடக்கம் குறித்த பகுதியில் வீதியில் மணல் கொட்டப்பட்டு பரப்பப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எப்படி கொட்டப்பட்டது என்பது தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.சட்டவிரோதமாக மணல் கடத்தல் காரர்கள் மணல் மண்ணை ஏற்றிச் செல்லும் போது நடவடிக்கை vடுக்க வேண்டிய தரப்புக்களால் துரத்திச் சென்றவேளை வீதியில் கடத்தல்காரர்கள் மணலை கொட்டி விட்டு தப்பிச் சென்றிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.குறித்த மணல் மண் வீதியில் கொட்டப்பட்டதை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையோ, பருத்தித்துறை பிரதேச சபையோ, அல்லது மருதங்கேணி பொலிசாரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பகல் வேளைகளில் ஒரளவு வாகனங்களை செலுத்தக் கூடிய நிலை இருந்தாலும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பது மிக மிக ஆபத்தான பயணமாகவே இருக்க போகின்றது.இதனால் கவனயீனமாக பயணிக்க கூடிய ஒருவர் குறித்த வீதியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையை அடையக் கூடிய நிலமை காணப்படுகின்றது.