சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19.03.2025) மாலை கேப்பாபிலவு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு காரணமாக ஏழு நாள் தடுப்புகாவலில் இருந்து விடுதலையாகி நேற்றையதினம் வீடு வந்து மது அருந்திவிட்டு சட்டவிரோத துப்பாக்கியை வைத்து மனைவியுடன் நேற்று இரவு சண்டையிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோத இடியன் துப்பாக்கியை வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கேப்பாபிலவு பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்
கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை இன்றையதினம் (20.03.2025) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது. சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19.03.2025) மாலை கேப்பாபிலவு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு காரணமாக ஏழு நாள் தடுப்புகாவலில் இருந்து விடுதலையாகி நேற்றையதினம் வீடு வந்து மது அருந்திவிட்டு சட்டவிரோத துப்பாக்கியை வைத்து மனைவியுடன் நேற்று இரவு சண்டையிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோத இடியன் துப்பாக்கியை வைத்திருந்த குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் கேப்பாபிலவு பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை இன்றையதினம் (20.03.2025) முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதுசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.