• Nov 25 2024

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையில் சாந்தனின் பூதவுடல் எள்ளங்குளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது..!!

Tamil nila / Mar 4th 2024, 9:41 pm
image

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையில் சாந்தனின் பூதவுடல் எள்ளங்குளத்தில்  சற்று முன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான சாந்தன் என்ற சுதேந்திர ராசா,   பல போராட்டங்களின்   பின்னர் கடந்த 28 ஆம் திகதி தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் அன்றைய தினம்  காலை உயிரிழந்தார். 

சாந்தனின் இழப்பு தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில்  தொடர் நெருக்கடியின் மத்தியில்,  கடந்த 02 ஆம் திகதி இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் உடல் இரண்டாவது முறை  பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது  உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து  சாந்தனின் வித்துடல்  தாங்கிய ஊர்திபவனி மக்களின் அஞ்சலிக்காக  வவுனியாவில் இருந்து ஆரம்பித்தது. 



அந்த வகையில், வவுனியா பழைய பேருந்து நிலையத்தில்  வவுனியா மக்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாங்குளம்,   கிளிநொச்சி ஆகிய இடங்களில்  சாந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

யாழ் நோக்கிய பயணத்தில்  நேற்று மாலை யாழ் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவில் பகுதிகளில் மக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் தொடர்சியாக வீதி எங்கும் நின்று தமது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள். 

அதனை தொடர்ந்து அவரது வித்துடன் சாந்தனின் சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட போது, தீப ஆராதனை செய்து சகோதரியால் வரவேற்கப்பட்டது அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது. 

இன்றைய தினம் சாந்தனின் இறுதிக் கிரியைகள், அவரது இல்லத்தில் 10.30 மணியளவில் ஆரம்பமானது. 

இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் சாந்தனின் வித்துடல் அங்குள்ள சனசமூக நிலையத்தில் வைக்கப்பட்டு அங்கு நினைவுரைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தனின்  பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  மதியம் 12:30 மணியளவில் இறுதி யாத்திரை பயணம் ஆரம்பமானது.

இறுதி யாத்திரையின் படி  அறிவகம் சன சமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் வந்தடைந்து அங்கிருந்து வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக  நாவலடி உடுப்பிட்டி வழியாக வல்வெட்டித்துறையை அடைந்து. 

வல்வெட்டித்துறையில் மிக முக்கியமான இடத்தில் அவரது வித்துடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அங்கிருந்து பொலிகண்டி வீதியூடாக  எள்ளங்குளத்தில்,   இறுதி யாத்திரை நிறைவு பெற்று  மக்களின் கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் சாந்தனின் வித்துடல் விதைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையில் சாந்தனின் பூதவுடல் எள்ளங்குளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் மழையில் சாந்தனின் பூதவுடல் எள்ளங்குளத்தில்  சற்று முன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான சாந்தன் என்ற சுதேந்திர ராசா,   பல போராட்டங்களின்   பின்னர் கடந்த 28 ஆம் திகதி தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் அன்றைய தினம்  காலை உயிரிழந்தார். சாந்தனின் இழப்பு தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்  தொடர் நெருக்கடியின் மத்தியில்,  கடந்த 02 ஆம் திகதி இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் உடல் இரண்டாவது முறை  பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது  உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து  சாந்தனின் வித்துடல்  தாங்கிய ஊர்திபவனி மக்களின் அஞ்சலிக்காக  வவுனியாவில் இருந்து ஆரம்பித்தது. அந்த வகையில், வவுனியா பழைய பேருந்து நிலையத்தில்  வவுனியா மக்களால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாங்குளம்,   கிளிநொச்சி ஆகிய இடங்களில்  சாந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. யாழ் நோக்கிய பயணத்தில்  நேற்று மாலை யாழ் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவில் பகுதிகளில் மக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் தொடர்சியாக வீதி எங்கும் நின்று தமது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து அவரது வித்துடன் சாந்தனின் சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட போது, தீப ஆராதனை செய்து சகோதரியால் வரவேற்கப்பட்டது அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது. இன்றைய தினம் சாந்தனின் இறுதிக் கிரியைகள், அவரது இல்லத்தில் 10.30 மணியளவில் ஆரம்பமானது. இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் சாந்தனின் வித்துடல் அங்குள்ள சனசமூக நிலையத்தில் வைக்கப்பட்டு அங்கு நினைவுரைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தனின்  பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  மதியம் 12:30 மணியளவில் இறுதி யாத்திரை பயணம் ஆரம்பமானது.இறுதி யாத்திரையின் படி  அறிவகம் சன சமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் வந்தடைந்து அங்கிருந்து வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக  நாவலடி உடுப்பிட்டி வழியாக வல்வெட்டித்துறையை அடைந்து. வல்வெட்டித்துறையில் மிக முக்கியமான இடத்தில் அவரது வித்துடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கிருந்து பொலிகண்டி வீதியூடாக  எள்ளங்குளத்தில்,   இறுதி யாத்திரை நிறைவு பெற்று  மக்களின் கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் சாந்தனின் வித்துடல் விதைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement