• Nov 19 2024

தாய் மனை தேடி, கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து வந்தது சாந்தனின் வித்துடல்..! இறுதிக்கிரிகைகள் நாளை இடம்பெறும்..!!

Tamil nila / Mar 3rd 2024, 8:59 pm
image

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிரிந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழந்த  தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது ஊரான உடுப்பிட்டியை இன்று மாலை வந்தடைந்தது. 

 உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வித்துடலை,  அனைவரது நெஞ்சையும் கணக்கவைக்கும் வகையில், "அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்" என கூறிய சாந்தனுடைய சகோதரி தீப ஆராதனை செய்து  வரவேற்றார்.

பின்னர் தாயின் அருகில் வைக்கப்பட்டு பெருந்திரளானோரின் கண்ணீரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் வித்துடல் தாங்கிய  ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சிக்கு சென்று   அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.

பின்னர்  வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

சாந்தனின்  இறுதிக் கிரிகைகள், அவரது இல்லத்தில் நாளை(4) காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகும். 

இறுதிக் கிரிகைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் அண்ணனின்  பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.

வல்வைட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். என உறவுகள் அறிவித்துள்ளனர்.


தாய் மனை தேடி, கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து வந்தது சாந்தனின் வித்துடல். இறுதிக்கிரிகைகள் நாளை இடம்பெறும். ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிரிந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழந்த  தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது ஊரான உடுப்பிட்டியை இன்று மாலை வந்தடைந்தது.  உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வித்துடலை,  அனைவரது நெஞ்சையும் கணக்கவைக்கும் வகையில், "அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்" என கூறிய சாந்தனுடைய சகோதரி தீப ஆராதனை செய்து  வரவேற்றார்.பின்னர் தாயின் அருகில் வைக்கப்பட்டு பெருந்திரளானோரின் கண்ணீரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் வித்துடல் தாங்கிய  ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சிக்கு சென்று   அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.பின்னர்  வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. சாந்தனின்  இறுதிக் கிரிகைகள், அவரது இல்லத்தில் நாளை(4) காலை 10:00 மணியளவில் ஆரம்பமாகும். இறுதிக் கிரிகைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் அண்ணனின்  பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.வல்வைட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். என உறவுகள் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement