• Nov 17 2024

வெற்றிலைக்கேணியில் பதற்றம் – மீனவர்கள்- பொலிஸார் இடையே முறுகல்..!!

Tamil nila / Mar 3rd 2024, 9:36 pm
image

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே இன்று  முறுகல் நிலை ஏற்பட்டது.

வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது.

உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது.

எனினும் தமது அறிவுறுத்தலை பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை குறித்த கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர்.

உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.




வெற்றிலைக்கேணியில் பதற்றம் – மீனவர்கள்- பொலிஸார் இடையே முறுகல். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே இன்று  முறுகல் நிலை ஏற்பட்டது.வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு குறித்த சங்கத்தால் தடை விதிக்கப்பட்டது.உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்துமாறு வெற்றிலைக்கேணி மீனவர்களின் கையொப்பத்துடன் வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரால் கரைவலை தொழில் சம்மாட்டியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது.எனினும் தமது அறிவுறுத்தலை பொருட்படுத்தாது தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை குறித்த கரைவலை வாடி மீனவர்களால் முற்றுகையிடப்பட்டு உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பது நிறுத்தப்பட்டது.சம்பவ இடத்தில் அதிகளவான மீனவர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதட்டம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசாருடனும் மீனவர்கள் முறுகலில் ஈடுபட்டனர்.உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement