• Jun 20 2026

மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்வு!

shanu / Jun 19th 2026, 9:19 pm
image

புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஹொன்ஸி கல்லூரியில் 1999 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் புலமைப்பரிசில் பரீட்சைக்கான கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்வு,  நேற்று பாடசாலை பிரதான மண்டபத்தில் உதவி அதிபர் மு. ஞானசேகரம்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில்  பி. பரமசிவம், ந. டேனி சிவானந்தன்,  து. சத்தியமூர்த்தி,  பி. சந்திரமோகன்,  சு. கிருஷ்ணகுமார், மு. புஷ்பகுமார் ஆகியோர் ஹொன்ஸி கல்லூரியின் 1999 ஆம் ஆண்டு சாதாரண தர பழைய மாணவர்கள் சார்பாக உதவிகளை வழங்கினர்.


நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ஹொன்ஸி கல்லூரி அதிபர்  ஆ. மதியழகன் அவர்களும், புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலய அதிபர்  ஆ. குமாரவேல் அவர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் விசேட விருந்தினர்களாக எம்பெல்பீல்ட் பிரிவு கிராம சேவையாளர் திரு. பு. கிருஷ்ணமூர்த்தி, தெக்கோயா தெற்கு பிரிவு கிராம சேவையாளர்  ஏ.எஸ். டார்வின், இன்ஜெஸ்ட்ரி பிரிவு கிராம சேவையாளர் ந. அற்புதமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


அத்துடன் போடைஸ் எஸ்டேட் குடும்பநல உத்தியோகத்தர் செல்வி சு. உஷாந்தினி, பட்டலகலை எஸ்டேட் குடும்பநல உத்தியோகத்தர் செல்வி சி. வயலட் ஆகியோரும், தரம் 5 மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


நிகழ்வு பிற்பகல் 12.30 மணியளவில் மங்களக் குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து உதவி அதிபரின் வரவேற்புரையும், தரம் 3 மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றன.


ஹொன்ஸி கல்லூரியின் முதல்வர் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து வினாத்தாள் பொதிகளை வழங்கிய உதவியாளர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.


பின்னர் பழைய மாணவர்கள் சார்பாக  பி. பரமசிவம் அவர்கள் மலையக மாணவர்களின் கல்வி உயர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தரம் 3 மாணவர்களின் குழு நடனம் இடம்பெற்றது.


இறுதியாக தரம் 5 மாணவர்களுக்கு வினாத்தாள் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நன்றியுரையை திருமதி சு. திலகவதி ஆசிரியர் வழங்கியதுடன், தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்வு புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஹொன்ஸி கல்லூரியில் 1999 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால் புலமைப்பரிசில் பரீட்சைக்கான கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்வு,  நேற்று பாடசாலை பிரதான மண்டபத்தில் உதவி அதிபர் மு. ஞானசேகரம்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில்  பி. பரமசிவம், ந. டேனி சிவானந்தன்,  து. சத்தியமூர்த்தி,  பி. சந்திரமோகன்,  சு. கிருஷ்ணகுமார், மு. புஷ்பகுமார் ஆகியோர் ஹொன்ஸி கல்லூரியின் 1999 ஆம் ஆண்டு சாதாரண தர பழைய மாணவர்கள் சார்பாக உதவிகளை வழங்கினர்.நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ஹொன்ஸி கல்லூரி அதிபர்  ஆ. மதியழகன் அவர்களும், புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலய அதிபர்  ஆ. குமாரவேல் அவர்களும் கலந்து கொண்டனர்.மேலும் விசேட விருந்தினர்களாக எம்பெல்பீல்ட் பிரிவு கிராம சேவையாளர் திரு. பு. கிருஷ்ணமூர்த்தி, தெக்கோயா தெற்கு பிரிவு கிராம சேவையாளர்  ஏ.எஸ். டார்வின், இன்ஜெஸ்ட்ரி பிரிவு கிராம சேவையாளர் ந. அற்புதமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.அத்துடன் போடைஸ் எஸ்டேட் குடும்பநல உத்தியோகத்தர் செல்வி சு. உஷாந்தினி, பட்டலகலை எஸ்டேட் குடும்பநல உத்தியோகத்தர் செல்வி சி. வயலட் ஆகியோரும், தரம் 5 மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.நிகழ்வு பிற்பகல் 12.30 மணியளவில் மங்களக் குத்துவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து உதவி அதிபரின் வரவேற்புரையும், தரம் 3 மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றன.ஹொன்ஸி கல்லூரியின் முதல்வர் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து வினாத்தாள் பொதிகளை வழங்கிய உதவியாளர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.பின்னர் பழைய மாணவர்கள் சார்பாக  பி. பரமசிவம் அவர்கள் மலையக மாணவர்களின் கல்வி உயர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தரம் 3 மாணவர்களின் குழு நடனம் இடம்பெற்றது.இறுதியாக தரம் 5 மாணவர்களுக்கு வினாத்தாள் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நன்றியுரையை திருமதி சு. திலகவதி ஆசிரியர் வழங்கியதுடன், தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Advertisement

Advertisement

Advertisement