• Nov 19 2024

தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

Tamil nila / Feb 24th 2024, 6:53 pm
image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொல குப்பம் ரோடு பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற பாடசாலை சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

”பாரதிதாசன் பேட்டையில் உள்ள அவரது வீட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான குடிநீர் டேங்க கில் தண்ணீர் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

தேவேந்திரன் மீது மின்சாரம் தாக்கியுளளது. சம்பவத்தை கண்ட தந்தை மாரி மகனை காப்பாற்ற சென்றபோது அவரம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அருகே இருந்தவர்கள் இருவரையும் . மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பள்ளி மாணவன் தேவேந்திரன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

பள்ளி முடித்து வீட்டிற்கு தேவையான தண்ணீரை பிடிப்பதற்காக சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது/.

மேலும் அரசு குடிநீர் டேங்கர் -யை சரிவர பராமரிக்கப்படாததால் தான் இந்த விபத்து நடைபெற்றதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேவேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொல குப்பம் ரோடு பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற பாடசாலை சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,”பாரதிதாசன் பேட்டையில் உள்ள அவரது வீட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான குடிநீர் டேங்க கில் தண்ணீர் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.தேவேந்திரன் மீது மின்சாரம் தாக்கியுளளது. சம்பவத்தை கண்ட தந்தை மாரி மகனை காப்பாற்ற சென்றபோது அவரம் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.உடனடியாக அருகே இருந்தவர்கள் இருவரையும் . மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பள்ளி மாணவன் தேவேந்திரன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.பள்ளி முடித்து வீட்டிற்கு தேவையான தண்ணீரை பிடிப்பதற்காக சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது/.மேலும் அரசு குடிநீர் டேங்கர் -யை சரிவர பராமரிக்கப்படாததால் தான் இந்த விபத்து நடைபெற்றதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேவேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement