• Apr 25 2026

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாடசாலை சமூக கரும்பு நடுகை விழா...!samugammedia

Ziya / Jan 26th 2024, 11:41 am
image

பாடசாலை சமூக கரும்பு நடுகை விழா இன்றையதினம்(26)  கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கலைமகள் வித்தியாலய முதல்வர் P.கணேசன் தலைமையில் இடம்பெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கம் இடம்பெற்றது.

பின்னர் கரும்பு செய்கை நிலத்தில் கரும்பு நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த திட்டத்திற்கு பிரித்தானியாவில் வாழும் வைத்திய கலாநிதி இ.சதானந்தன் நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், அயல் பாடசாலை அதிபர்கள், விவசாயிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாடசாலை சமூக கரும்பு நடுகை விழா.samugammedia பாடசாலை சமூக கரும்பு நடுகை விழா இன்றையதினம்(26)  கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கலைமகள் வித்தியாலய முதல்வர் P.கணேசன் தலைமையில் இடம்பெற்றது.விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபம் வரை அழைத்து செல்லப்பட்டனர்.தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கம் இடம்பெற்றது. பின்னர் கரும்பு செய்கை நிலத்தில் கரும்பு நாட்டி வைக்கப்பட்டது. குறித்த திட்டத்திற்கு பிரித்தானியாவில் வாழும் வைத்திய கலாநிதி இ.சதானந்தன் நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், அயல் பாடசாலை அதிபர்கள், விவசாயிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement