• May 02 2024

மன்னாரில் பாடசாலை மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல்..! அதிபர் மீது நடவடிக்கை எடுக்காது நழுவும் பொலிஸார்..!

Chithra / Dec 19th 2023, 10:17 am
image

Advertisement

 

பாடசாலை மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய அதிபர் மீது பொலிஸாரோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மன்னார் கரசல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவனுக்கு அந்தப் பாடசாலை அதிபர் பாலியல் ரீதியான துன்புறுத்தலைப் புரிந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எருக்கலம்பிட்டி பொலிஸ் காவலரனில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அத்துடன், சம்பந்தப்பட்ட அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவனின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். 

எனினும் அதிபர் சார்ந்த தரப்பு பள்ளிவாசல் ஊடாகத் தலையீடு செய்து பொலிஸ் முறைப்பாட்டை இணக்கத்தோடு முடித்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மன்னார் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலயக் கல்விப் பணிபாளர் சம்பந்தப்பட்ட அதிபர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவின் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளமலேயே பொலிஸார் இணக்கத்தோடு முடித்துவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் பாடசாலை மாணவனுக்கு பாலியல் துன்புறுத்தல். அதிபர் மீது நடவடிக்கை எடுக்காது நழுவும் பொலிஸார்.  பாடசாலை மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய அதிபர் மீது பொலிஸாரோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மன்னார் கரசல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவனுக்கு அந்தப் பாடசாலை அதிபர் பாலியல் ரீதியான துன்புறுத்தலைப் புரிந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் எருக்கலம்பிட்டி பொலிஸ் காவலரனில் முறைப்பாடு செய்யப்பட்டது.அத்துடன், சம்பந்தப்பட்ட அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவனின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். எனினும் அதிபர் சார்ந்த தரப்பு பள்ளிவாசல் ஊடாகத் தலையீடு செய்து பொலிஸ் முறைப்பாட்டை இணக்கத்தோடு முடித்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதுதொடர்பில் மன்னார் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலயக் கல்விப் பணிபாளர் சம்பந்தப்பட்ட அதிபர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவின் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளமலேயே பொலிஸார் இணக்கத்தோடு முடித்துவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement