• Mar 30 2025

பரீட்சை எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் மாயம் - தீவிர தேடலில் பொலிஸார்

Chithra / Mar 27th 2025, 2:30 pm
image


க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற  பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்கள் 26 ஆம் திகதி பாடசாலை சீருடையை அணிந்து, மஹியங்கனை தம்பராவ பரீட்சை மையத்திற்குச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறினர்.

தேர்வு எழுதச் சென்றிருந்த இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதுதொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பரீட்சை எழுதச் சென்ற பாடசாலை மாணவர்கள் மாயம் - தீவிர தேடலில் பொலிஸார் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதச் சென்ற  பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.16 வயதுடைய இந்த இரண்டு மாணவர்களும் மஹியங்கனையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் 26 ஆம் திகதி பாடசாலை சீருடையை அணிந்து, மஹியங்கனை தம்பராவ பரீட்சை மையத்திற்குச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறினர்.தேர்வு எழுதச் சென்றிருந்த இருவரும் வீடு திரும்பாததால், அவர்களின் பெற்றோர் மஹியங்கனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதுதொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement