• Mar 30 2025

பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீரென தடை விதித்த நாடு - விரக்தியில் மக்கள்

Chithra / Mar 27th 2025, 2:34 pm
image

பப்புவா நியூ கினியா நாட்டில் பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

பப்புவா நியூ கினியாவில் 20 இலட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், அதில் 13 இலட்சம் மக்கள் பேஸ்புக்கை பாவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பேஸ்புக் ஊடாக போலி செய்திகள் மற்றும் தவறான புகைப்படங்கள் அதிகளவில் பப்புவா நியூ கினியா நாட்டில் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால், பேஸ்புக் விரைவில் தடை செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. 

இவ்வாறிருக்க, பப்புவா நியூ கினியா அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளது.

இதனால், அந்நாட்டு மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியால் விரக்தியில் உள்ளனர்.

அத்துடன், அந்நாட்டின் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கருத்து சுதந்திர மீறல் என விமர்சித்துள்ளன.

பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீரென தடை விதித்த நாடு - விரக்தியில் மக்கள் பப்புவா நியூ கினியா நாட்டில் பேஸ்புக் நிறுவனத்துக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் 20 இலட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், அதில் 13 இலட்சம் மக்கள் பேஸ்புக்கை பாவித்து வருகின்றனர்.இந்நிலையில், பேஸ்புக் ஊடாக போலி செய்திகள் மற்றும் தவறான புகைப்படங்கள் அதிகளவில் பப்புவா நியூ கினியா நாட்டில் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.இதனால், பேஸ்புக் விரைவில் தடை செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இவ்வாறிருக்க, பப்புவா நியூ கினியா அரசாங்கம் பேஸ்புக் நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளது.இதனால், அந்நாட்டு மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியால் விரக்தியில் உள்ளனர்.அத்துடன், அந்நாட்டின் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கருத்து சுதந்திர மீறல் என விமர்சித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement