நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேல், வடக்கு, கிழக்கு, சபரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை நாளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா ஊழியர்களின் சீருடைகள் தொடர்பில் தளர்வான கொள்கையொன்று பின்பற்றப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீளத் திறப்பு நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.மேல், வடக்கு, கிழக்கு, சபரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார். அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை நாளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்வி, கல்விசாரா ஊழியர்களின் சீருடைகள் தொடர்பில் தளர்வான கொள்கையொன்று பின்பற்றப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.