பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களை ஈச்சிலம்பற்று பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவருகிறது.
பாதிக்கப்பட்ட 24 வயதுடைய பெண் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இளைஞர் ஒருவர், குறித்த பெண்ணுடன் டிக்டொக் சமூக வளைத்தளம் மூலமாக தொடர்பாகி நட்பாக பழகியுள்ளார்.
இந்த பின்ணணியில் அவ்விருவரும் சிறிய காட்டுப்பகுதியில் சந்தித்துள்ளனர்.
சந்திப்பு சம்மந்தமாக இளைஞர் தனது நண்பர்களிடம் தெரிவிக்க, அங்கு வந்த நண்பர்கள் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞர்களை இன்று மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்டொக் நண்பனை சந்திக்க சென்ற இளம் பெண் பாலியல் பலாத்காரம்; திருமலையில் 4 இளைஞர்கள் கைது பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நான்கு இளைஞர்களை ஈச்சிலம்பற்று பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவருகிறது.பாதிக்கப்பட்ட 24 வயதுடைய பெண் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இளைஞர் ஒருவர், குறித்த பெண்ணுடன் டிக்டொக் சமூக வளைத்தளம் மூலமாக தொடர்பாகி நட்பாக பழகியுள்ளார்.இந்த பின்ணணியில் அவ்விருவரும் சிறிய காட்டுப்பகுதியில் சந்தித்துள்ளனர். சந்திப்பு சம்மந்தமாக இளைஞர் தனது நண்பர்களிடம் தெரிவிக்க, அங்கு வந்த நண்பர்கள் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாக தெரியவருகிறது.கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த இளைஞர்களை இன்று மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.