பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் அருகே உள்ள காணியில் இருந்த இந்த துப்பாக்கி வெடித்ததில், குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பம்பஹின்ன, வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய விஜேசுந்தர பண்டார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நபர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மின்சாரத் தொழில்நுட்பவியலாளராகப் (Electrician) கடமையாற்றி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுத் துப்பாக்கி வெடித்து மின்சாரத் தொழில்நுட்பவியலாளர் பலி பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வீட்டின் அருகே உள்ள காணியில் இருந்த இந்த துப்பாக்கி வெடித்ததில், குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பம்பஹின்ன, வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய விஜேசுந்தர பண்டார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த நபர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மின்சாரத் தொழில்நுட்பவியலாளராகப் (Electrician) கடமையாற்றி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.