• Jan 16 2026

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு; பல உயிர்களைக் காப்பாற்றி 'ஹீரோ'வான நபரின் துணிச்சல்!

Chithra / Dec 15th 2025, 8:53 am
image

அவுஸ்திரேலியாவில் நேற்று  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

 

அவுஸ்திரேலியாவை கடந்து அவர் உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவரது துணிச்சலான செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமரும் பாராட்டியுள்ளார்.


சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை நிகழ்வில் நேற்று  நடந்த தாக்குதலில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். 


சம்பவத்தின் போது, பழக்கடை வியாபாரியான ஹமட் எல் அஹமட், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை தடுத்து அவரை கீழே வீழ்த்தி மேலும் பலரின் உயிர்களும் பறிபோகாமல் காப்பாற்றியுள்ளார்.

 

43 வயதான அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

துரதிஷ்டவசமாக இரண்டாவது துப்பாக்கிதாரியால் அவர் இரண்டு முறை சுடப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அவர் குணமடைவார் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். 


இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


தாக்குதலின் போது 50 வயது தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் அவரது 24 வயது மகன் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் உயிரிழந்த துப்பாகிதாரிடம் 10 வருடங்களாக பதிவு செய்யப்பட்ட துப்பாக்கி இருந்துள்ளது. அவரது இருப்பிடத்தை பொலிசார் சோதனை செய்தபோது 6 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு; பல உயிர்களைக் காப்பாற்றி 'ஹீரோ'வான நபரின் துணிச்சல் அவுஸ்திரேலியாவில் நேற்று  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவை கடந்து அவர் உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவரது துணிச்சலான செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமரும் பாராட்டியுள்ளார்.சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை நிகழ்வில் நேற்று  நடந்த தாக்குதலில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். சம்பவத்தின் போது, பழக்கடை வியாபாரியான ஹமட் எல் அஹமட், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை தடுத்து அவரை கீழே வீழ்த்தி மேலும் பலரின் உயிர்களும் பறிபோகாமல் காப்பாற்றியுள்ளார். 43 வயதான அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. துரதிஷ்டவசமாக இரண்டாவது துப்பாக்கிதாரியால் அவர் இரண்டு முறை சுடப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் குணமடைவார் என்று அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது 50 வயது தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் அவரது 24 வயது மகன் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் உயிரிழந்த துப்பாகிதாரிடம் 10 வருடங்களாக பதிவு செய்யப்பட்ட துப்பாக்கி இருந்துள்ளது. அவரது இருப்பிடத்தை பொலிசார் சோதனை செய்தபோது 6 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement