• Aug 19 2026

3.0 மீற்றர் வரை உயரும் கடல் அலைகள்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

Chithra / Aug 19th 2026, 12:59 pm
image


காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.


நீர்கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரத்தை ஒட்டிய கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக அவ்அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தக் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.


எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.


சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


3.0 மீற்றர் வரை உயரும் கடல் அலைகள்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.நீர்கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடலோரத்தை ஒட்டிய கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 - 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதாக அவ்அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தக் கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பொலனறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement