• Aug 14 2025

இரண்டாவது T20 போட்டி- தென்னாபிரிக்க அணி வெற்றி!

Thansita / Aug 12th 2025, 9:05 pm
image

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே Darwin மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 53 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, டிவால்ட் பிரெவிஸின் (125 ஓட்டங்கள், 56 பந்துகள்) அசத்தலாக  218/7 என பெரிய இலக்கை பதித்தது.  

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. 

தென்னாபிரிக்க அணி சார்பாக  துடுப்பெடுத்தாடிய டிவால்ட் பிரெவிஸ் 56 பந்துகளில் துடுப்பெடுத்தாடி 125 ஓட்டங்களைப் பெற்றது. 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் க்ளென் மெக்ஸ்வெல் மற்றும் Ben Dwarshuis ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

பின்னர், 219 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. 

அவுஸ்திரேலிய அணி சார்பாக டிம் டேவிட் 50 ஓட்டங்களையும் எலெக்ஸ் கெரி 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

தென்னாபிரிக்கா சார்பில் Kwena Maphaka மற்றும் Corbin Bosch ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். 

தென்னாபிரிக்க அணியின் இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது


இரண்டாவது T20 போட்டி- தென்னாபிரிக்க அணி வெற்றி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே Darwin மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 53 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, டிவால்ட் பிரெவிஸின் (125 ஓட்டங்கள், 56 பந்துகள்) அசத்தலாக  218/7 என பெரிய இலக்கை பதித்தது.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்க அணி சார்பாக  துடுப்பெடுத்தாடிய டிவால்ட் பிரெவிஸ் 56 பந்துகளில் துடுப்பெடுத்தாடி 125 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் க்ளென் மெக்ஸ்வெல் மற்றும் Ben Dwarshuis ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். பின்னர், 219 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது. அவுஸ்திரேலிய அணி சார்பாக டிம் டேவிட் 50 ஓட்டங்களையும் எலெக்ஸ் கெரி 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாபிரிக்கா சார்பில் Kwena Maphaka மற்றும் Corbin Bosch ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர். தென்னாபிரிக்க அணியின் இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement