முதல்வராக பொறுப்பேற்க முடியாத நிலையில், விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்கள் வழங்கிய விவகாரத்தில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தடுமாறி உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மே 4ம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலேயே, தவெக, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், விஜய் தான் முதல்வராக பொறுப்பேற்கப் போகிறார் என, ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவரது வீட்டிற்கு முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்களை வழங்கினர்.
விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, வேலுார் டி.ஐ.ஜி. தர்மராஜன் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்க்கு, ஆளுநர் அழைப்பு விடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து, விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பின்வாங்கி தொடரணி வாகனங்களையும் திரும்ப பெற்றதுடன் பாதுகாப்பு வளையத்தையும் விலக்கிக் கொண்டனர்.
இது குறித்து, பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், இதற்கு முன் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வர் ஆகின்றனர் என்ற தகவல் கிடைத்த உடனேயே, பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டன.
ஆனால், விஜய் விவகாரத்தில், தற்போது ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவசரப்பட்டு விட்டனர். விஜய் பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தவெக மட்டுமல்லாது பெரும்பான்மையோடு வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க எப்படி அழைக்க முடியும்? பெரும்பான்மையை மட்டுமே நிருபிக்க வேண்டும்.
யார், யார் ஆதரவு என்னும் விபரத்தை அவர் தெரிவிக்க வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு பெரும்பான்மையை நிருபிக்க 118 எம்எல்ஏக்களையும் அழைத்து வர வேண்டியதில்லை, என்றார்.
விஜய்க்கு அடுத்தபடியாக, அதிக தொகுதிகளை வென்றுள்ள அதிமுக, திமுக இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால், அனுமதிப்பீர்களா? என்ற கேள்விக்கு, ' பெரும்பான்மைக்குரிய ஆதாரங்களுடன் எந்தக் கட்சி வந்தாலும் அதை ஏற்று பரிசீலிப்பேன்.அடுத்த 2 அல்லது 3 தினங்களில் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பேன்' என்றார்.
விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு - ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தடுமாற்றத்தால் பரபரப்பு முதல்வராக பொறுப்பேற்க முடியாத நிலையில், விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்கள் வழங்கிய விவகாரத்தில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தடுமாறி உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, மே 4ம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலேயே, தவெக, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், விஜய் தான் முதல்வராக பொறுப்பேற்கப் போகிறார் என, ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவரது வீட்டிற்கு முதல்வருக்கான பாதுகாப்பு வாகனங்களை வழங்கினர்.விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, வேலுார் டி.ஐ.ஜி. தர்மராஜன் சிறப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.ஆனால், ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்க்கு, ஆளுநர் அழைப்பு விடுக்க மறுத்து விட்டார். இதையடுத்து, விஜய்க்கு முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஐ.பி.எஸ். அதிகாரிகள் பின்வாங்கி தொடரணி வாகனங்களையும் திரும்ப பெற்றதுடன் பாதுகாப்பு வளையத்தையும் விலக்கிக் கொண்டனர்.இது குறித்து, பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், இதற்கு முன் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, முதல்வர் ஆகின்றனர் என்ற தகவல் கிடைத்த உடனேயே, பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், விஜய் விவகாரத்தில், தற்போது ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவசரப்பட்டு விட்டனர். விஜய் பாதுகாப்பு விவகாரத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர் என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் தவெக மட்டுமல்லாது பெரும்பான்மையோடு வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை. பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க எப்படி அழைக்க முடியும் பெரும்பான்மையை மட்டுமே நிருபிக்க வேண்டும்.யார், யார் ஆதரவு என்னும் விபரத்தை அவர் தெரிவிக்க வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு பெரும்பான்மையை நிருபிக்க 118 எம்எல்ஏக்களையும் அழைத்து வர வேண்டியதில்லை, என்றார்.விஜய்க்கு அடுத்தபடியாக, அதிக தொகுதிகளை வென்றுள்ள அதிமுக, திமுக இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால், அனுமதிப்பீர்களா என்ற கேள்விக்கு, ' பெரும்பான்மைக்குரிய ஆதாரங்களுடன் எந்தக் கட்சி வந்தாலும் அதை ஏற்று பரிசீலிப்பேன்.அடுத்த 2 அல்லது 3 தினங்களில் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க யாரும் உரிமை கோரவில்லை எனில், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பேன்' என்றார்.