• Sep 03 2025

கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம்; ஜனாதிபதி அநுரவால் ஆரம்பிப்பு

Chithra / Sep 2nd 2025, 11:04 am
image

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டிற்கான, விதை தென்னை தோட்டத்திற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். 

கிளிநொச்சி - பளை பகுதியில் இந்த விதை தென்னை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. 

சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு கட்டமாக ஜனாதிபதி தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில்  வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம், துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம்; ஜனாதிபதி அநுரவால் ஆரம்பிப்பு வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டிற்கான, விதை தென்னை தோட்டத்திற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கிளிநொச்சி - பளை பகுதியில் இந்த விதை தென்னை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு கட்டமாக ஜனாதிபதி தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்  வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகம், துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement