• Mar 10 2026

தோப்பூரில் மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறி வகைகள் கைப்பற்றல்

Chithra / Feb 3rd 2026, 12:14 pm
image

 

தோப்பூர் வாராந்த சந்தையில் மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர் வாராந்த சந்தை இன்று (03) பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.


இதன்போது மனித பாவனைக்கு உகந்ததல்லாத கரட், கத்தரிக்காய் உள்ளிட்ட சுமார் 150 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட மரக்கறி வகைகளை அழிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மூதூர் சுகாதார பணிமனையின் வைத்திய அதிகாரி என்.ஹஸ்ஸாலி பணிப்புரைக்கமைவாக உணவகங்கள், வாராந்த சந்தைகள் தொடர்ச்சியாக சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதோடு சட்டநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  


தோப்பூரில் மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறி வகைகள் கைப்பற்றல்  தோப்பூர் வாராந்த சந்தையில் மனித பாவனைக்கு ஒவ்வாத மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட தோப்பூர் வாராந்த சந்தை இன்று (03) பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.இதன்போது மனித பாவனைக்கு உகந்ததல்லாத கரட், கத்தரிக்காய் உள்ளிட்ட சுமார் 150 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய மரக்கறி வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட மரக்கறி வகைகளை அழிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மூதூர் சுகாதார பணிமனையின் வைத்திய அதிகாரி என்.ஹஸ்ஸாலி பணிப்புரைக்கமைவாக உணவகங்கள், வாராந்த சந்தைகள் தொடர்ச்சியாக சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதோடு சட்டநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement