• Nov 22 2024

தேர்தலை இலக்காகக்கொண்டு இனவாதத்தை தூண்டும் சுயநல அரசியல்வாதிகள் - நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு

Chithra / Jan 2nd 2024, 12:44 pm
image

 


பிறந்திருக்கும் புது வருடம் தேர்தல் ஆண்டு. அதனால் தேர்தலை இலக்காக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல  அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

2024 புதுவருடத்தில் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக சமூகத்தில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அரச ஊழியர்கள் என்றவகையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் உறுதிப்பிரமாணம் வழங்கினாலும் அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியல் நல்லெண்ணம் இல்லை.

என்றாலும் நீதி அமைச்சின் அதிகாரிகளாக நாங்கள் நாட்டில் இருக்கும் முன்மாதிரியான அமைச்சு என்பதை மக்கள் மத்தியிலும் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.

அத்துடன் உலகில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும்போது இந்தளவு குறுகிய காலத்துக்குள் ஸ்திரநிலைக்கு வந்த வேறு நாடு இல்லை.

எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. நாங்கள் தற்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம் . 

2023ஆம் ஆண்டும் ஜீ.எஸ்பி பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ள தேவையான முக்கியமான அளவுகோல்களை பூரணப்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டது நீதி அமைச்சாகும்.

மேலும் 2024ஆம் வருடத்துக்குள்  60 புதிய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். என்றார்.


தேர்தலை இலக்காகக்கொண்டு இனவாதத்தை தூண்டும் சுயநல அரசியல்வாதிகள் - நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு  பிறந்திருக்கும் புது வருடம் தேர்தல் ஆண்டு. அதனால் தேர்தலை இலக்காக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல  அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.2024 புதுவருடத்தில் கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.ஜனநாயக சமூகத்தில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரச ஊழியர்கள் என்றவகையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் உறுதிப்பிரமாணம் வழங்கினாலும் அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியல் நல்லெண்ணம் இல்லை.என்றாலும் நீதி அமைச்சின் அதிகாரிகளாக நாங்கள் நாட்டில் இருக்கும் முன்மாதிரியான அமைச்சு என்பதை மக்கள் மத்தியிலும் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.அத்துடன் உலகில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும்போது இந்தளவு குறுகிய காலத்துக்குள் ஸ்திரநிலைக்கு வந்த வேறு நாடு இல்லை.எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. நாங்கள் தற்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம் . 2023ஆம் ஆண்டும் ஜீ.எஸ்பி பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ள தேவையான முக்கியமான அளவுகோல்களை பூரணப்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டது நீதி அமைச்சாகும்.மேலும் 2024ஆம் வருடத்துக்குள்  60 புதிய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement