தமது அரசியல் நலனுக்காக மக்களை தவறான திசையில் வழி நடத்த முனையும் சுயநல அரசியல்வாதிகள்...! அடையாளம் கண்டு புறக்கணிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்...!
சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் எனவும் அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு முழுமையாக விடுபடாத போதிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய முன்னுரிமை அளித்து வருகின்றார்.
அதனடிப்படையில், தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் பயணிப்பதன் ஊடாகவே ஓர் சுபிட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமது அரசியல் நலனுக்காக மக்களை தவறான திசையில் வழி நடத்த முனையும் சுயநல அரசியல்வாதிகள். அடையாளம் கண்டு புறக்கணிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள். சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் எனவும் அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு முழுமையாக விடுபடாத போதிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய முன்னுரிமை அளித்து வருகின்றார்.அதனடிப்படையில், தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் பயணிப்பதன் ஊடாகவே ஓர் சுபிட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.