முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது " ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரனால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அரச உத்தியோகத்தர்களுக்கு க்ளீன் ஸ்ரீலங்கா என்றால் என்ன? என்பதை தெளிவூட்டுவதுடன் அரச பணியினை உத்தியோகத்தர்கள் திறப்பட மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.
மேலும் அனைத்துத் துறைகளும் சமூகம்(Socially), சுற்றுச்சூழல்(Environmentally), நெறிமுறை(Ethically), சார்ந்து சரியான மாற்றங்களைக் கொண்டுவந்து அரச உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.
மேலும் அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருவை எவ்வாறு செயற்படுத்தல் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
'தூய்மையான இலங்கை' திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கருத்தரங்கு. முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றைய தினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இதன்போது " ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரனால் தெளிவுபடுத்தப்பட்டது.இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அரச உத்தியோகத்தர்களுக்கு க்ளீன் ஸ்ரீலங்கா என்றால் என்ன என்பதை தெளிவூட்டுவதுடன் அரச பணியினை உத்தியோகத்தர்கள் திறப்பட மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் அனைத்துத் துறைகளும் சமூகம்(Socially), சுற்றுச்சூழல்(Environmentally), நெறிமுறை(Ethically), சார்ந்து சரியான மாற்றங்களைக் கொண்டுவந்து அரச உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளை திறம்பட ஆற்றி மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.மேலும் அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற "க்ளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத் திட்ட நிகழ்வில் எடுத்துக் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.மேலும் அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல், டிஜிற்றல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருவை எவ்வாறு செயற்படுத்தல் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.