வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களையும், வரியில்லா இலங்கைக்கு சிகரெட்டுக்களை கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்கா, ஆடியம்பலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் 6 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் உட்பட ஏழு பேர் கைது. வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களையும், வரியில்லா இலங்கைக்கு சிகரெட்டுக்களை கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.கட்டுநாயக்கா, ஆடியம்பலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் 25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் 6 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.