• May 03 2026

ஓட்டோ - மோட்டார்சைக்கிள் மோதி சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயம்!

shanu / May 2nd 2026, 7:39 pm
image

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லைட்  வீதியில் நேற்று மாலை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தம்பலகாமம் பகுதியில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கந்தளாய் லைட் வீதி (Light Road) பகுதியில் பயணித்த போது, குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 


காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டோ - மோட்டார்சைக்கிள் மோதி சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயம் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லைட்  வீதியில் நேற்று மாலை (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தம்பலகாமம் பகுதியில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கந்தளாய் லைட் வீதி (Light Road) பகுதியில் பயணித்த போது, குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement