• Jun 30 2024

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குளவி கொட்டுக்கு இலக்காகிய ஏழு பொலிஸார்..!

Chithra / Jun 28th 2024, 12:15 pm
image

Advertisement

 

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் பேரில்,

பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கடந்த 26 ஆம் திகதி தலும்பேவ பிரதேசத்திற்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காகச் சென்றுள்ளனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவர் தப்பிச் சென்ற நிலையில் சந்தேக நபரொருவர் கசிப்பு உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, அப்பகுதியில் உள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடொன்று கலைந்ததால் அங்கிருந்த ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கெக்கிராவ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குளவி கொட்டுக்கு இலக்காகிய ஏழு பொலிஸார்.  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் பேரில்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கடந்த 26 ஆம் திகதி தலும்பேவ பிரதேசத்திற்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காகச் சென்றுள்ளனர்.இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இருவர் தப்பிச் சென்ற நிலையில் சந்தேக நபரொருவர் கசிப்பு உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது, அப்பகுதியில் உள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடொன்று கலைந்ததால் அங்கிருந்த ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் கெக்கிராவ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement