வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் கனகராஜன்குளத்தைச் சேர்ந்த 64 வயதுடைய சிவராசா உதயகுமாரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் கப் ரக வாகனம் மோதியதில் பலியான உயிர் சாரதி தப்பியோட்டம் வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கனகராஜன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிள் பயணித்த அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் கனகராஜன்குளத்தைச் சேர்ந்த 64 வயதுடைய சிவராசா உதயகுமாரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.