• Feb 06 2025

அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

Chithra / Dec 8th 2024, 4:00 pm
image

  

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள், அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன. 

மேலும், அமைச்சர்களின் பங்களாக்களை தங்கள் பயன்பாட்டிற்கு தருமாறு மூன்று நீதிபதிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, சுற்றுலாத்துறையை மேம்படுத்த அமைச்சர் பங்களாக்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சகத்தின் சில அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை   அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள், அமைச்சர்களின் பங்களாக்களை வாடகைக்குக் கோரியுள்ளன. மேலும், அமைச்சர்களின் பங்களாக்களை தங்கள் பயன்பாட்டிற்கு தருமாறு மூன்று நீதிபதிகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதனிடையே, சுற்றுலாத்துறையை மேம்படுத்த அமைச்சர் பங்களாக்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என அமைச்சகத்தின் சில அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement