• May 22 2025

முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஆறு பேருக்கும் 14நாள் விளக்கமறியல்

Thansita / May 22nd 2025, 6:20 pm
image

கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில்  சுருக்குவலை  தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு,  இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் நேற்றையதினம் (21.05.2025) கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு  கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்  தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில்    திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடற்தொழில்  திணைக்களத்தினர் ,

கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகுகளையும்,  இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறுநபர்களையும்  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது ஆறு பேரையும்  14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

புத்தள மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்களும் கொக்குதொடுவாய் பகுதியை சேர்ந்த  ஒருவருமாக ஆறுபேர்  நேற்றையதினம் முல்லைத்தீவு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஆறு பேருக்கும் 14நாள் விளக்கமறியல் கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில் சட்டவிரோத முறையில்  சுருக்குவலை  தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு,  இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறுபேர் நேற்றையதினம் (21.05.2025) கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.முல்லைத்தீவு  கொக்குதொடுவாய்  கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்  தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில்    திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடற்தொழில்  திணைக்களத்தினர் , கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகுகளையும்,  இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.கைது செய்யப்பட்ட ஆறுநபர்களையும்  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது ஆறு பேரையும்  14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.புத்தள மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்களும் கொக்குதொடுவாய் பகுதியை சேர்ந்த  ஒருவருமாக ஆறுபேர்  நேற்றையதினம் முல்லைத்தீவு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement