கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நெற் செய்கைகாக மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் இந்த சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படுகிறது.
தற்போது இந்த பயிர்கள் 15-25 நாட்கள் பயிர்களாக உள்ள நிலையில் அங்கு அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக கிளிநொச்சி மாவட்டம் முரசுமோட்டை, ஊரியான்,பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் வாழும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த கால போக நெற்ச்செய்கையிலும் இந்த நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் அறக்கொட்டியான் புழுத்தாக்கம் தீவிரம்: விவசாயிகள் கவலை. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.இந்த நெற் செய்கைகாக மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களின் கீழ் இந்த சிறுபோக செய்கை முன்னெடுக்கப்படுகிறது.தற்போது இந்த பயிர்கள் 15-25 நாட்கள் பயிர்களாக உள்ள நிலையில் அங்கு அறக்கொட்டியான் புழுத்தாக்கம் பயிர்களை முற்றாக அழிப்பதாக கிளிநொச்சி மாவட்டம் முரசுமோட்டை, ஊரியான்,பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் வாழும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் குறித்த புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த கால போக நெற்ச்செய்கையிலும் இந்த நோய்த்தாக்கம் காரணமாக தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.