• May 18 2026

கடும் மின்னல் தாக்கம் - 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Chithra / May 18th 2026, 2:14 pm
image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இன்று (18) மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கடும் மின்னல் தாக்கம் - 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (18) மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 11 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement